பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கிறது.
ஐப்பசி மாதம் துலாம் இராசிக்குரியது. துலாம் நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிகத்திற்குரியது.
காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.
காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
சக்தி நாயனார் குருபூஜை (18.10.22)
தேய்பிறை ஏகாதசி (20.10.22)
ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.
இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.
முருகன் சுக்ர வார விரதம் (21.10.22)
முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
சனி மகாப் பிரதோஷம் (22.10.22)
தேய்பிறையில் வரும் மகாப்பிரதோஷம்
கோவத்ச துவாதசி (21 & 22.10.22)
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது
தனத்திரயோதசி (22 & 23.10.22)
ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது.
திருமகளின் அருளை சேர்க்கும் நாள். இன்றைய தினம் அட்சய திருதியைக்கு சமமானது.
தன்வந்திரி ஜெயந்தி (22 & 23.10.22)
திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.
தீபாவளி (24.10.22)
ஐப்பசி மாதம், தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்த்தசி திதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
கேதார கவுரி விரதம் (24.10.22)
ஐப்பசி அமாவாசை அன்று கடைப் பிடிக்கப்படும் உயர்ந்த சிவ விரதம்
கோவர்தன தினம் (25 & 26.10.22)
ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார்.
கந்த சஷ்டி : (25.10.22 முதல் 30.10 22 வரை)
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
30.10.22 சூரசம்ஹாரம்
31.10.22 முருகன் திருக்கல்யாணம்
பூசலார் நாயனார் குருபூஜை (27.10.22)
வாஸ்து நாள் (28.10.22)
ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை (29.10.22)
பொய்கையாழ்வார் ஜெயந்தி (01.11.22)
பூதத்தாழ்வார் ஜெயந்தி (02.11.22)
பேயாழ்வார் ஜெயந்தி (03.11.22)
ஐப்பசி சதயம் : (03.11.22)
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள்
வளர்பிறை ஏகாதசி : (04.11 22)
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா” என்று அழைக்கப்படுகிறது.
சனி மகாப் பிரதோஷம் (05.11.22)
வளர்பிறையில் வரும் மகாப்பிரதோஷம்
திருமூல நாயனார் குருபூஜை (07.11.22)
நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூஜை (08.11.22)
ஐப்பசி பௌர்ணமி : (08.11.22)
சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இடங்கழி நாயனார் குருபூஜை (09.11.22)
கிருத்திகை (09.11.22)
சங்கடஹர சதுர்த்தசி (11.11.22)
ஐப்பசி கடைசி நாள் (16.11.22)
ஐப்பசி மாத கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.
17.11.2022 - கார்த்திகை 1, முடவன் முழுக்கு, இன்று காவிரி ஆற்றில் நீராடினாலும் அதே பலன் கிடைக்கும்.
ஓம் நமசிவாய. 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது.
ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை.
உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது.
‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார்.
ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.
சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு,
நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும்.
சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான்.
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன.
இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.
நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில்
அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது.
சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால்
பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்
நாகநாதசுவாமி, பாம்பணிநாதர், திருப்பாதாளேஸ்வரர், ஸ்ரீபதி விண்ணகர ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு புற்று லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும்.
ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக