அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது.
ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை.
உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது.
‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார்.
ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.
சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு,
ஜோதிடக் கலையில் தலைசிறந்த நிபுணனாகத் திகழ்ந்தான் என்றும்,
துரியோதனின் மனைவி பானுமதி இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அசல நிசுமித்ர மகரிஷி என்பவர், இன்றும் தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வருவதாக ஐதீகம் உண்டு.
அதுமட்டுமல்ல, துரியோதனின் தாயார் காந்தாரி இந்த ஆலயத்துக்கு வந்து விளக்கு பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, விளக்கு பூஜையைத் தொடங்கி வைத்த திருக்கோயிலும் இதுதான்.
இங்கு பல்லவர்களுடைய சிற்பங்கள் இருந்தாலும், சோழ மன்னர்கள்தான் இந்தக் கோயிலைக் கட்டியது’’.
வாத முனீஸ்வரர்
கோயிலின் முதல் வாசலின் அருகில் இருக்கும் முனீஸ்வரர் அவ்வளவு விசேஷமானவர்.
சிவன் கோயில், எல்லா கோயில்களிலும் கண்டிப்பாக முனீஸ்வரர் இடம் பெற்றிருப்பார்.
அவர்தான் முதல் காவல் தெய்வம்.
இங்கிருக்கும் முனீஸ்வரருக்கு, வாத முனீஸ்வரர் என்று பெயர்.
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் உள்ள அனைத்து வலி, வாதம், வியாதிகளைக் குணமாக்கும் வல்லமை படைத்தவர்.
அதனால்தான் இவரை வாத முனீஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.
‘‘சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் இவருக்கு நல்லெண்ணெயும் மூலிகைத் தைலமும் கலந்து அபிஷேகம் செய்து, அதை எடுத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
தினமும் இரவில் அதை உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் அல்லது உடல் முழுவதும் பூசிக்கொண்டால்
உடல் அசௌகரியம் மறைந்து நிவாரணம் கிடைத்து விடுவதை பக்தர்கள் அனுதினமும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள்.
விசேஷமான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அந்தத் தைலத்தின் மருத்துவக் குணமும் அதற்கு மேலே முனீஸ்வரரின் சக்தியும் சேர்ந்து
உடம்பின் வாத சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்கின்றன’’
விஷ பாதிப்பை நீக்கிய சிவன்
இங்கேயிருக்கும் சுவாமி அருள்மிகு கடம்பவன நாதர் என்றழைக்கப்படும் விஷமங்களேஸ்வரர்.
சிவனடியார் ஒருவர் இந்தக் கோயிலுக்கும் தினமும் வந்து ஈசனை வணங்குவார்.
அதன் பிறகுதான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.
அப்படி ஒருமுறை சிவதரிசனம் முடிந்து பிராகாரம் வலம் வரும்போது, சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகே அவரை ஓர் அரவம் தீண்டிவிடுகிறது.
‘உன்னை மட்டுமேதானே வணங்கினேன் ஈஸ்வரனே... எனக்கு இந்த நிலையா?’ என்று கதறி, கண்ணீர் விட்டழுத சிவனடியார்,
‘சிவமே கதி’ என்று நினைத்தவராக அங்கேயே அப்படியே கிடந்தார்.
என்ன அதிசயம். அவருடைய அன்பில் நெகிழ்ந்த பெருமானார் அவர் உடலில் ஏறியிருந்த பாம்பின் விஷத்தை முறித்து, அவரை உயிர் பிழைக்க வைத்தார்.
அதனால், விஷத்தை முறிப்பதற்கான சக்தி வாய்ந்தவர் இந்தப் பெருமான். வண்டுக்கடி மற்ற விஷ ஜந்துக்களின் கடியால் அவதிப்படுபவர்களுக்கான நிவர்த்தி தலம் இது.
விஷக்கடி என்று வரும் பக்தர்களுக்கு, மூலவருக்கு விபூதியால் அர்ச்சனை செய்து அந்த விபூதியை பிரசாத மாகத் தருகிறார்கள்.
விபூதியை விஷக்கடிப்பட்ட இடத்தில் தடவிக்கொண்டு, உள்ளுக்கும் சாப்பிட வேண்டும்.
விஷத்தின் பாதிப்பு தன்னால் குறைவதைக் காணலாம்..
பரமனுக்குப் பன்னிரு தீபங்கள்
‘`இத்தலம் ஒரு விஷக்கடி நிவர்த்தித் தலமாகக் கருதப்படுவதால், சுவாமிக்கு விஷமங்களேஸ்வரர் என்று திருப்பெயர்.
இவ்வூரில் விஷ ஜந்துக்கள் யாரையும் தீண்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷமங்களேஸ்வரரை ஒரு தாம்பாளத்தில் 12 தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால் விஷக்கடி துன்பங்கள் மற்றும் விஷக்கடியை விட கொடியதாய் கருதப்படும்
பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, பேராசை, வன்முறை போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்தி பெறக்கூடும்.
இங்கிருக்கும் அம்பாள், செவ்வாய் தோஷத்தையும் செவ்வாய் பார்வையினால் ஏற்படக் கூடிய இன்னல்களையும் போக்கக்கூடியவள்.
இந்தக் கோயிலுக்கு வேறொரு சிறப்பும் உண்டு.
பொதுவாக ஒரு தலத்துக்கான எல்லை தெய்வம் ஊரின் எல்லையில் கோயில் கொண்டிருக்கும்.
இங்கே இந்தத் தலத்தின் எல்லை தெய்வமான கலிங்காயி அம்மன், இந்தக் கோயிலுக்குள்ளேயே சந்நிதி கொண்டிருக்கிறாள்.
துன்பப்பட்டு வருவோரின் துயர்களைத் துடைத்தெறியும் துடையூர், அனைவரும் வாழ்வில் அவசியம் ஒருமுறை சென்று தரிசிக்க வேண்டிய தலம்.
குறை களைத் தீர்க்கும் கோயிலாக மட்டுமல்லாமல், கண்களுக்குக் கலை விருந்து அளிக்கும்
வரலாற்றுச் சிறப்புமிக்க தெய்வ மூர்த்தங்களும், மற்ற சிற்பங்களும் அமைந்திருக்கும் ஆலயமாக இருப்பதால், பல்வேறு வகைகளில் சிறப்பான தலமாக விளங்குகிறது துடையூர்.
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.
இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது.
இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள்.
இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும்.
இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் ஸ்ரீ உதயதேவரீஸ்வரி சமேத உதய ஸ்ரீ தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது.
திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயம் என்ற சிறப்புக்குரியது இந்த ஆலயம்.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும்.
தல வரலாறு
இந்தக் கோவிலின் தலவரலாறு குறித்த ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், 15ம் நூற்றாண்டிற்கு முன்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது.