அதனை பக்தியுடன் தொட்டாலும், அதன் கரையில் தானம் தர்ப்பணம் செய்தாலும்,
எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும்.
இன்று (18-10-2022) செவ்வாய் கிழமை, ஐப்பசி மாத முதல் நாளில் புண்ணியம் அளிக்கும் காவிரி துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது.
துலா மாதம் என்பது ஐப்பசி மாதம். இன்று ஐப்பசி மாதம் பிறந்திருக்கிறது.
துலாக்கோல் என்பது தராசு.
தராசு இரண்டு பக்கமும் சமமாக இருப்பதைப் போல, இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றார்கள்.
காலச்சக்கரத்தின் 7ஆவது ராசி இந்த ராசி. இந்த ராசியில் ஆத்மகாரகன் சூரியன் நீசம் அடைகிறார். எனவே இந்த மாதத்தில் புனித நீராடுவதன்
மூலம் ஆத்ம பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
காவிரியில் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக பெற்றார்.
அர்ஜுனன் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாத பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தார், என்கிறது புராணம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை அன்று கங்காதேவி காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்கிறாள், எனவும் கூறுகின்றனர்.
காவிரியை தட்சிண கங்கை என்றும் போற்றுகின்றனர்.
பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி என காவிரி நதியை பல பெயர்களில் அழைக்கின்றனர்.
துலா காவிரி ஸ்நானம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!
ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்றும் போற்றுவார்கள். ஐப்பசி எனப்படும் துலாம் மாதத்தில் காவிரியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்று விவரிக்கிறது, புராணம். இந்த பூவுலகில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐப்பசியில் உலகில் உள்ள அறுபத்தாறு கோடி திருத்தங்களும் காவேரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.
ஐப்பசி துலா காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால், அம்மரத்திற்கு காவிரி நீரை ஊற்றி வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன்களை தரும்.
14 லோகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள்.
காவிரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும்
கடைத்தேற் றுகிறார்கள்.
மேலும் துலா மாத ஐப்பசியில், காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள், ஆசி வழங்குவார்கள்.
ஐப்பசியில் காவிரியில் நீராடினால் ஆயுளும் ஆரோக்கியமும் கூடும்.
வாக்கு பலிதம் ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என காவேரி மகாத்மியம் கூறுகிறது.
ஐப்பசி மாதம் முழுவதும் துலாம் மாதம் எனப்படும்.
இந்த காலங்களில் சூரிய உதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலாஸ்நானம் என்று போற்றப்படுகிறது.
ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையிலும், கடைசி தேதி என்று மயிலாடுதுறை நந்திக்கட்டத்திலும் நீராட வேண்டும் என்பது முறை.
தலைக்காவேரி, ராமபுரம், கொடுமுடி, ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்கோவில், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பராண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர் துறைகளில் துலாம் மாதத்தில் நீராட சிறந்தவை ஆகும்.
துலா மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பார்கள்.
காவிரியில் ஒவ்வொரு நாளும் நீராடுவது சிறப்பு என்றாலும் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடுவது மிகச் சிறப்பு.
பொதுவாக நதிகளில் கங்கைநதி உயர்வானது என்பார்கள்.
கங்கையில் நீராடும் பொழுது எல்லா பாவங்களும் போய்விடும் என்பது சாஸ்திரம்.
ஆனால், அந்த கங்கையின் பாவங்கள் எங்கே போகும் என்று சொன்னால், காவிரி நதியில்தான் போகும்.
அதனால், ஆழ்வார்கள் “கங்கையின் புனிதமாயக் காவிரி” என்று காவிரியைச் சிறப்பித்துப் பாடினர்.
இந்த காவிரிக் கரையில்தான் ஸ்ரீமன்நாராயணனின் ஐந்து அரங்கங்கள் இருக்கின்றன.
தலைக்காவிரியில் ஆரம்பித்து மாயவரம் திருஇந்தளூர் வரை காவிரிக் கரையில் பெருமாள் யோகசயனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு.
துலா மாதத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலிய அத்தனை புனித நதிகளும் காவேரியில் நீராடி புனிதம் பெறுகின்றன.
ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்து அன்னதானம் செய்வது விசேஷம் என்று காவேரி மகாத்மியம் கூறுகிறது.
சூரிய உதயத்திற்கு முன் நீராடி கிழக்குநோக்கி சூரிய நமஸ்காரத்தை செய்வது விசேஷம்.
அப்பொழுது சங்கல்பம் செய்து கொண்டு சூரியனை நோக்கி அர்க்கியம் விட வேண்டும்.
ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, பவானி கூடுதுறை, திருவையாறு, திருவிடைமருதூர், பூம்புகார், மாயவரம் முதலிய பல்வேறு இடங்களில் துலா மாதத்தில் நீராடுவதற்கு துலா கட்டங்கள் உண்டு.
அருகிலுள்ள கோயில்களிலிருந்து சுவாமி ஊர்வலமாக வந்து தீர்த்தவாரியும் நடக்கும்.
*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.
இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.