சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.
‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள்.
மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை.
எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.
சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும்.
மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.
எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.
அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.
எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள்
செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.
மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது.
எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.
ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.
*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.
இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.