ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்து இருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக் கொடுப்பார்.
*சொந்த வீடு யோகம் :*
சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.
நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்கு சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும்.
சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோஷத்திற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் கிடைக்கும்.
*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.
இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.