தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
*2. பட்சப் பிரதோஷம்*
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும்.
இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
*3. மாசப் பிரதோஷம்*
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப்
பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
*4. நட்சத்திரப் பிரதோஷம்*
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில்
வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
*5. பூரண பிரதோஷம்*
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை” தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்.
பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
*6. திவ்யப் பிரதோஷம்*
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு
அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
*7. தீபப் பிரதோஷம்*
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
*8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்*
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.
இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து,
சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
*9. மகா பிரதோஷம்*
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும்.
எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”.
திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும்.
மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
*10. உத்தம மகா பிரதோஷம்*
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி,
ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
*11. ஏகாட்சர பிரதோஷம்*
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர்.
அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
*12. அர்த்தநாரி பிரதோஷம்*
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால்
அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
*13. திரிகரண பிரதோஷம்*
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம்.
இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
*14. பிரம்மப் பிரதோஷம்*
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.
இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
*15. அட்சரப் பிரதோஷம்*
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன்,
பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
*16. கந்தப் பிரதோஷம்*
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம்.
இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
*17. சட்ஜ பிரபா பிரதோஷம்*
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’.
தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால்
முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
*18. அஷ்ட திக் பிரதோஷம்*
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
*19. நவக்கிரகப் பிரதோஷம்*
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
*20. துத்தப் பிரதோஷம்*
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பஸ்மருத்ராக்ஷங்களை ஒழிந்தால் அமங்கலத்வம் மேலிட்டு முண்டைகளாவர்; ஆகையால் அப்போது ஒருதிரணமுந் தமக்கு யாவரானுங் கிட்டாது என்பதறிந்தே வேஷமாத்திரம் சரியாய்ப்போட்டுக் கொண்டனர்.
சிவாலயத்தில் பரிவார அணிவகுப்பில் உள்ள விஷ்ணுவையும், சைவர் கிருகங்களிற் ( வீடுகளில்) உள்ள சிவ வடிவ படங்களோடும், திரிபுண்டர இடப்பட்டனவாக உள்ள ( விபூதி ருத்திராக்க அணிந்த ) விஷ்ணு வடிவங்களே சைவர் வணங்கவும் அர்ச்சிக்கவும்
தகுதியானது. சித்திரோர்த்துவ புண்டரஞ் (நாமம்) சாத்தப்படாததாய் விபூதி தாரண உள்ளோரால் அர்ச்சிக்கப்படும் அனந்த சயனத்துப் பத்மநாபமூர்த்தி போன்ற (கேரளாவில் உள்ள கோயில்) விஷ்ணு மூர்த்தங்களைச் சைவர் தரிசிக்கலாம்.
~பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சைவ சமய சரபம்
பக்கம் 68
திருவீழிமிழலை தலம் - அப்பர் தேவாரம்
நீற்றினை நிறையப் பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே
தேம் கடல் ஆய பராபர சண்முகன் சேத்திரம் ஆம்
வேங்கடம் தன்னை ஐந்து ஆயுதற்கு ஆக்கி அவ்வேங்கடத்தில்
புங்கடம் கொள் அரியைக் குகன் பூசித்ததாப் பொறித்தோர்
தாம் கடம் விட்ட பின்பு ஏது அடைந்தாரோ சழுக்குடனே.
விளக்கம்:
இன்பக் கடலான பராபர சண்முகனின்
திருத்தலமாகும் வேங்கடத்தைப் பஞ்சாயுதம் ஏந்துபவர்க்குரியதாக்கி, அந்த வேங்கடத்தில் அழகிய உடம்பு கொண்ட திரு மாலைக் குகப்பெருமான் பூசித்ததாகவும் எழுதிவைத்தோர், தாம் உடம்பைவிட்ட பின்னர் பொய்யினால் ஏது அடைந்தாரோ? ( அதாவது நல்லகதி ஏதும் அடையமாட்டார் என்பது குறிப்பு)
~பாம்பன் சுவாமிகள் அருளிய திருவலங்கற்றிரட்டு பல்சந்தப்பரிமளம்
வெவ்வேறு சந்தர்ப்பம் பாடல்-28
கந்தபுராணம்
"அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்"
உலகிலேயே மிகப்பெரிய யானைப்படையை கட்டி ஆண்ட சோழ மன்னன், தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் - இப்படி பல சிறப்புக்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட
ராஜராஜசோழனின் தலையாய சிறப்பு என்ன தெரியுமா?!!!
இன்று நாம் படித்து உருகும் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் ராஜ ராஜ சோழனே!
ராஜ ராஜ சோழன் என்கிற மன்னன் ஒருவர் இல்லையென்றால் சைவத் திருமுறைகளே நமக்கு கிடைத்திருக்காது!
திருமுறைகண்ட புராணம்!
திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார் உதவியோடு தக்கப்பண்களுடன் திருமுறைகளை மீட்ட ராஜ ராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும்!
நம்பியாண்டார் நம்பி கிடைத்த தேவாரத்
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும்
திருமணத்தடையை நீக்கும் திருச்செந்தூர் திருப்புகழ்!
நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும் கூறுகிறார்!
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும்!
இதற்கு அருணகிரி நாதர் முருகனைப்பற்றி பாடி அருளிய மந்திர திருப்புகழை
திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம், 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமண தோஷங்கள் இருந்தாலும் அத்தனையும் நீங்கி 48 நாள் முடிவதற்குள் நல்ல பதில் கிடைக்கும்!
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை!
விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர