தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 128-வது கோவிலாக விளங்குகிறது திருவலிவலம் திருத்தலம்.
திருவாரூர் அருகே அமைந்துள்ளது திருவலிவலம் திருத்தலம்.
தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 128-வது கோவிலாக இது விளங்குகிறது.
இந்த திருத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
திருவலிவலத்துக்கு வடக்கே திருக்கோளிலி என்னும் திருக்குவளை, தெற்கே கைச்சின்னம் எனும் கச்சனம், கிழக்கே திருக்கன்றாப்பூர், மேற்கே திருநெல்லிக்காஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் சூழ்ந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் ஒழுக்கத்தில் சிறந்த ஒருவன் இருந்தான்.
அவன் முன்வினைப் பயன் காரணமாக சில பாவங்களைச் செய்தான்.
அதனால் அவன் அடுத்தப் பிறவியில் கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது.
மிகச் சிறியதாக இருந்த அந்தப் பறவையை, பெரிய பறவைகள் ஒன்றுசேர்ந்து தாக்கியதால் ரத்தம் வழிந்தது.
காயம் அடைந்த அந்தக் குருவி, அங்கிருந்து நெடுதூரம் பறந்து ஒரு மரத்தில் போய் அமர்ந்தது.
அந்த மரத்தின் கீழ் சிவனடியார் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர் தன் சீடர்கள் சிலருக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
அந்த சிவனடியாரின் உபதேசங்களை கரிக்குருவியும் கேட்டுக்கொண்டிருந்தது.
சிவனடியார் தன் சீடர்களிடம், ‘அன்பர்களே! சிவ தலங்களில் சிறந்தது மதுரை திருத் தலம்.
தீர்த்தங்களில் சிறந்தது, அந்த மதுரையம்பதியில் இருக்கும் பொற்றாமரைக் குளம்.
மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் இந்த உலகத்தில் வேறு இல்லை.
எனவே வாழ்நாளில் ஒரு முறையேனும் மதுரை திருத்தலம் சென்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி,
சொக்கநாத பெருமானை வழிபட்டு வர வேண்டும்.
அங்குள்ள சோம சுந்தரக் கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களைக் கொடுத்து அருள்வார்’ என்று கூறினார்.
சிவனடியாரின் உபதேசத்தைக் கேட்ட கரிக்குருவி, தானும் மதுரைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவு செய்தது.
அதன்படி அந்தக் கரிக்குருவி, மதுரையை அடைந்து சொக்கநாதர் கோவிலை வலம் வந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியது.
பின்னர் அங்குள்ள இறைவனை மனமுருக வழிபட்டது.
மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தது, அந்தக் குருவி.
அதன் வழிபாட்டைக் கண்டு சொக்கநாதர் மனமிளகினார்.
கரிக் குருவியின் முன்பாகத் தோன்றி அதற்கு, சில மந்திரங்களை உபதேசம் செய்தார். அதனால் கரிக்குருவி சிற்றறிவு நீங்கி, பேரறிவு பெற்றது.
ஞானம் பெற்ற கரிக்குருவி, ‘இறைவா! உங்களது கருணையால் நான் ஞானம் பெற்றவனானேன்.
இருந்தாலும் எனக்கு ஒரு குறை உள்ளது.
மிகச் சிறிய பறவையான நான், மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகிறேன்.
பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்’ என்று முறையிட்டது.
அதற்கு சிவபெருமான், ‘எல்லாப் பறவைகளையும் விட நீ வலிமையுடையவனாக மாறுவாய்’ என்று அருளினார்.
ஆனால் அந்தக் கரிக்குருவி, ‘சுவாமி! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் உள்ள அனைவரும் வலிமையுடன் இருக்கும் வரம் தந்தருள வேண்டும்’ என்று கேட்டது.
இறைவனும் அப்படியே அருளினார்.
இதனால் அந்தக் கரிக்குருவி ‘வலியான்’ என்ற பெயரையும் பெற்றது.
வரம் பெற்றகுருவி திருவலிவலம் திருத்தலத்திற்கு வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது.
எனவே இந்த தலத்திற்கு ‘திருவலிவலம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.
ஆலய அமைப்பு :
மூன்று பக்கமும் நீர் நிறைந்த அகழியால் சூழ பெற்ற இத்திருக்கோவிலில் பஞ்சமூர்த்திகள் உள்ளடக்கிய தோரணவாயில் நம்மை வரவேற்கிறது.
ஆலயத்தின் இரண்டாவது பிரகாரம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோச்செங்கண் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், ‘மாடக்கோவில்’ ஆகும்.
பதினாறு படிகள் ஏறிச் சென்று பார்த்தால் மூன்று நிலை விமானத்தின் உள்ளே கருவறையில், சிவலிங்க ரூபமாக மூலவர் மனத்துணை நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இவரை இதயக்கமலேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.
‘மனத்துணையே என்றன் வாழ்முதலே’ என்று மாணிக்கவாசகர் புகழ்கிறார்.
அப்பரோ தனது பதிகத்தில் ‘மனத்துளானே’ என்று கூறுகிறார்.
சுந்தரரும், ‘நல்லுடையார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானூறு குறைஅளித் தருள் புரிவானை’ என்று இத்தல இறைவனை புகழ்ந்துரைக்கிறார்.
மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என்று எத்தனையோ நன்மை-தீமைகளை அனுபவிக்கிறார்கள்.
மனித மனதிற்கு துன்பம் வரும்போது மனம் கனமாகிறது.
அந்த மன அழுத்தத்தால் ‘ரத்த அழுத்தம்’, ‘இதய நோய்கள்’, ‘மாரடைப்பு’ போன்றவை ஏற்படுகிறது.
இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம்.
அவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும்.
ஆம்! அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன.
அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றது.
‘பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே’
என்று இந்தத் திருக்கோவில் நிருதி மூலையில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகருக்கு பாமாலை சூட்டுகிறார் திருஞானசம்பந்தர்.
தேவாரப் பண்ணிசைப்போர் புகழ் பெற்ற இந்த திருப்பதிகத்தைப் பாடியே, மற்ற பண்களை இசைக்கிறார்கள் என்றால் இத்தலமும் அதில் எழுந்துள்ள விநாயகரும் எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அடியவர்களின் துயர் களைய சிவசக்தியால் உருவாக்கப்பட்ட கண நாதர் இவர்.
இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில், ‘அமரர்கள் மதித்த சேவக வலிவலம் நகருறை பெருமானே’ என்று போற்றுகிறார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிவலத்தில் அம்பிகை ‘மழையொண்கண்ணி’ என்ற பெயரில், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.
அம்பிகை சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தவனத்தில் தலவிருட்சமான புன்னை மரம் காற்றில் அசைந்து இனிய மணம் பரப்புகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழித்தடத்தில் கச்சனம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந் திருக்கிறது திருவலிவலம்.
திருநெல்லிக்கா ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஊர் இருக்கிறது.
வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்
சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
தீராத நோய் நொடி பிரச்சனைக்கும் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் சில வழிகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதும்.
அது நமக்கு நல்லதொரு வாழ்க்கையை வரமாக கொடுத்துவிடும்.
முன்னோர்கள் சொன்னது அனைத்துமே மூட நம்பிக்கை என்று, இன்று எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கைகழுவி விட்டதால் தான் கஷ்டங்கள் வந்து நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
🌷திருமால் அன்பர்களை காத்து அருள் புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதார ங்கள் ஆகும்.
இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.
🌷திருமால் ஆமைஅவதாரம் எடுத்து மலையை தாங்கியதாலேயே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது.
அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினார்.
திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று தேவி யை மணந்து கொண்டார்.
🌷மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டி ருந்த திருமகளின் மறு கூறான பூமி தேவியை மேற்கொண்டு வந்தார்.
அவரை பூவராகம் என்று போற்றுகின்றனர்.
அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகிலவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.