செல்வ செழிப்புடன் வாழ வைக்கும் லட்சுமி குபேர பூஜையை பற்றிய பதிவு :*
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும்.
ஏனென்றால் இந்த நேரத்தில் தான் குபேர மகாலட்சுமி தேவியை வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றார்.
எனவே நாமும் அதே நேரத்திலே அவர்களை வணங்க வேண்டும் என்பது தான் இந்த நேரத்திற்கான காரணம்.
இந்த பூஜைக்கு நமக்கு தேவையான பொருட்கள் மஹாலட்சுமி தாயார் படம் மற்றும் குபேர படம்.
படத்தை பூஜை அறையில் வடக்கு திசையை பார்ப்பது போல் வைக்க வேண்டும்.
இரண்டு குத்து விளக்கு, அல்லது இரண்டு அகல் விளக்கு அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
லக்ஷ்மி தாயாரின் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மலர்களை அலங்காரம் செய்து விடுங்கள்.
துளசியும் தாமரை மலரும் அதில் இருக்க வேண்டும்.
அடுத்ததாக வாசனை நிறைந்த குங்குமம், ஒரே மாதிரியான 9 நாணயங்கள்.
அதற்கு மேலும் நாணயங்கள் வைப்பதும் வெள்ளி தங்கம் போன்றவை வைப்பதும் உங்களின் விருப்பம் ஆனால் ஒன்பது நாணயங்கள் மட்டும்தான் இந்த பூஜைக்கு தேவை.
நெய்வேத்தியமாக சிகப்பு அவல் அதில் தேங்காய் நாட்டு சர்க்கரை சேர்த்து அதை வைத்தாலே போதும்.
பழங்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் தேங்காய் இவ்வளவு மட்டுமே பிரதானம்.
பூஜையை தொடங்க முதலில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து விட்டு ஆரம்பிக்க வேண்டும் இல்லை உங்கள் வீட்டில் வேறு ஏதாவது விநாயகர் விக்ரங்கள் ஏதாவது இருந்தால் அதையும் பூஜையில் வைத்துக் கொள்ளலாம்.
விநாயகரை பூஜித்த பிறகு உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு உங்களின் கஷ்டங்கள் யாவும் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த பூஜையை தொடங்க வேண்டும்.
குபேர எந்திரத்தின் முன்பு அமர்ந்து தாமரை பூவின் 9 இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு இதழிலும் ஒரு நாணயத்தை வைத்து அதில் கொஞ்சம் குங்குமம் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும்.
ஒவ்வொரு முறை இந்த நாணயத்தை வைக்கும் போதும் இந்த மந்திரத்தை மட்டும் ஜெபித்தாலே போதும்.
*ஓம் குபேராய நமக
ஓம் தந்தாய நமக*
இந்த ஒரு நாமத்தை மட்டும் நீங்கள் அந்த ஒன்பது நாணயத்தை வைக்கும் போதும் ஒன்பது முறை சொல்ல வேண்டும்.
பூஜை முடிந்த பின்பு அதில் உள்ள இந்த காசுகளை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.
வியாபாரம் செய்பவராக இருந்தால் நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்து கொள்ளலாம் இந்த பணத்தை அடுத்தடுத்த முறை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் தனியாக எடுத்து வைத்து விடுங்கள் மற்ற பணத்துடன் கலந்து செலவழித்து விட வேண்டாம்.
இந்த லட்சுமி குபேர பூஜை எளிமையான முறையில் உங்கள் இல்லங்களில் வணங்கி இனி வரும் நாட்களில் நீங்கள் நல்ல செல்வ செழிப்போடு வாழ லக்ஷ்மி தேவி ஆசீர்வாதமும் குபேரரின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள்.
இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம்,சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..
ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம், புராணங்கள் போன்ற கதைகளாக வடித்துள்ளனர்.
இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும், மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.
இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப் பெருமான் தன "தெற்றுப் பல்லால்"