1 - சுக்கு -50 -கிராம்
2 - சித்தரத்தை 25 - கிராம்
3 -ஓமம் 10 - கிராம்
4 - அரிசி திப்பிலி -25 - கிராம்
5 - கண்டந் திப்பிலி -25 -கிராம்
6 - விரலி மஞ்சள் - 1 துண்டு
7 -நெய் - 50 - கிராம்
8 - நல்லெண்ணெய் -50- கிராம்
9 - பனை வெல்லம் - 200 -கிராம்
மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது மருந்து பொடியை போட்டு கிளறவும்
லேகியம் போல் இறுகி வரும் பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது எடுத்து விரல்களில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.
தீபாவளி அன்று அதி காலையில் எண்ணை ஸ்நானம் செய்ததும் புத்தாடை கள் அணிந்து கொண்டு முதலில் "#தீபாவளிலேகியம்" ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுவைத்து சாப்பிடவும்.
இதனால் உடலில் குளிர்ச்சி சேராமல் தடுக்கும், ஜலதோஷம் பிடிக்காது.
கடலை மாவு, நெய் சேர்ந்த பலகாரங்கள் உண்டாலும் வயிறு மந்தமோ, அஜீரணமோ ஏற்ப்படாது.
இந்த லேகியம் பலகாரங்கள் உண்ட பிறகு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட அனைத்தும் ஜீரணமாகி செரித்து விடும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம்,சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..
ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம், புராணங்கள் போன்ற கதைகளாக வடித்துள்ளனர்.
இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும், மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.
இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப் பெருமான் தன "தெற்றுப் பல்லால்"