கோவை கார் குண்டு வெடிப்பு மிகுந்த வேதனைக்குரிய கண்டனத்திற்குரிய சம்பவமாகும். இச்சம்பவம் தற்செயலான விபத்தாகவே இருந்திட வேண்டும் என விழைகிறோம். அதேநேரம், இதன் பின்னணியில் ஏதேனும் தீவிரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் @CMOTamilnadu
இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஓர் உயர்ந்த உதாரணமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் இங்கே ஒருதாய் பிள்ளைகளாய் தொப்புள்கொடி உறவுகளாய்ப் பிணைந்து இணைந்து வாழ்ந்து வரும் சூழலைச் சீர்குலைக்கும் எந்த சூழ்ச்சிக்கும் இங்கு இடங்கொடுத்து விடக்கூடாது.
பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் #Coimbatore
பொதுமக்கள் வதந்திகளுக்கோ விஷமிகளின் தூண்டலுக்கோ இடங்கொடுத்து விடாமல்,
சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட ஓரணியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்றிட வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன்.
கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு என்பதற்கு பதிலாக தவறுதலாக கோவை கார் குண்டு வெடிப்பு என்று அச்சிட்டுவிட்டேன். ட்விட்டரில் திருத்தம் செய்யும் வசதியில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவில் முதன் முறையாக கால நிலை மாற்றத்திற்கான அமைச்சரவையை ஏற்படுத்தியதும் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தான்.
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் பல்வேறு முக்கிய துறைகளின் அனுபவமிக்க மூத்த அரசு செயலாளர்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.