B.R.பந்துலு 1964-ல் தயாரித்து இயக்கி வெளியிட்ட படம் கர்ணன். நிறைய பொருட்செலவு செய்தார் பந்துலு. ரூ.40 லட்சம்.
சிவாஜி என் டி ராமாராவ் தேவிகா சாவித்திரி அசோகன் நடித்தனர்.
இசை விஸ்வனாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள்.
படம் திருப்திகரமாக வளர்ந்து வந்தது.
படப்பிடிப்பு முடியும் தருவாய். தயாரிப்பாளர்-இயக்குனருக்கு ஒரு விநோதமான யோசனை தோன்றியது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் கீதோபதேசக் காட்சியை முழுமையாகப் படமாக்க வேண்டும். செலவு பற்றிக் கவலையில்லை.
அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு அதிர்ச்சி. கீதோபதேசக் காட்சியை எவ்வளவு சுருக்கமாக எடுத்தாலும் இருபது நிமிடங்களுக்கு மேலே ஆகிவிடும். கதையோட்டத்திற்குப் பெரும் தடையாக இருக்கும். படம் பார்ப்பவர்களுக்கும் ஆர்வம் இருக்காது. எழுந்து வெளியே சென்றுவிடுவார்கள்.
இன்னமும் நிறைய சொல்லிப் பார்த்தார்கள். படத்தின் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி வந்து அவர் பங்குக்கு அவரும் சொல்லிக் பார்த்தார். பந்துலு அசைந்து கொடுக்கவேயில்லை. Pall of Gloom என்பார்களே அது போன்ற இறுக்கமான சூழ்நிலை பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்தில்.
அந்தச் சமயத்தில் M.S.விஸ்வநாதன் அங்கு வந்தார். துணை இயக்குனர்கள் அந்த இக்கட்டான நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். விஸ்வநாதன், 'அவ்வளவுதானே, கீதோபதேசக் காட்சியை நன்றாக எடுத்துவிடலாம் என்றார். மற்றவர்கள் அவருடைய முகத்தைப் பார்த்தனர் நம்பிக்கை சிறிதுமின்றி.
பந்துலு வந்தார். விஸ்வநாதன் அவரிடம் "கீதோபதேசக் காட்சியை எடுக்க வேண்டும், அவ்வளவுதானே. எளிதாகச் செய்துவிடலாம். கண்ணதாசனிடம் சொல்லுங்கள். ஒரே பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிடுவார்" என்றார்.
கண்ணதாசனிடம் இதைக் கூறியதும் மறுநாளே பகவத்கீதை பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டார், பாமரனுக்கும் புரியும்படியான வார்த்தைகளில். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல் பெரும் வெற்றியடைந்தது.
மூன்றரை நிமிடப் பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன். பந்துலுவுக்குப் பரம சந்தோஷம். இதோ அந்தப் பாடல்:
சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன.
1
இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது.
2
அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். *இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.*
தமிழர்கள் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம்1400 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
நாம் எதைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அதை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
எதை நினைக்கிறோமோ, அதைச் செய்வோம். எதைச் செய்கிறோமோ, அதில் பலன் கிடைக்கும். எவ்வளவு பலன் என்பது எவ்வளவு முயற்சி, காலம், இடம் அவற்றைப் பொறுத்தது.
வெற்றி அடைய வேண்டுமா? வெற்றி பற்றி சிந்திக்க வேண்டும். வெற்றி அடைந்தவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் எப்படி வென்றார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களின் வெற்றி நமக்கு ஒரு தூண்டு கோல், அது ஒரு ஊக்கம் தரும்.
உள்ளதிற்குள் பெரிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? மிகப் பெரிய காரியத்தை யார் செய்திருப்பார்கள்?
மிகப் பெரியவன் கடவுள் என்று கொண்டால், அவனுடைய வெற்றிதானே மிகப் பெரிய வெற்றியாக இருக்க முடியும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கந்தாஸ்ரமம் என்னும் ஊரில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
1
சென்னையில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் தாம்பரம் என்னும் ஊர் உள்ளது. தாம்பரத்தில் இருந்து கந்தாஸ்ரமத்தில் உள்ள இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
2
சிறப்புகள்
இங்குள்ள முருகன் 'சுவாமிநாத சுவாமி" என்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் அருளுகிறார். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாற்றிய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக காட்சியளிக்கிறார்.
அதை மீட்க, படைகளுடன் போனார், மன்னர்.
அச்சமயம், பாண்டவர்கள், விராட நகரில் இருப்பதாக
சந்தேகப்பட்ட துரியோதனன், மற்றொரு பக்கமாக விராட நகரில் நுழைந்து, அங்கிருந்த பசுக் கூட்டங்களை கவர்ந்தான்.