'தெரு பிரச்சினைகளை கையில் எடுங்க, மக்களோடு அந்த பிரச்சினைகள் குறித்து பேசும் போது சர்வதேச நிலைமைகளையும் இணைத்து எளிமையா விவரித்து சொல்லுங்க, அதுக்கு தான் நாம இருக்கோம்...' என்று இளம் தோழர்களுக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்கம் தான் தோழர் என்.நன்மாறன். 1/8 #Nanmaran#comrade@tncpim
அரசியல் வாழ்வில் எளிமை, நேர்மை என்றால் அதில் நம் காலத்தின் உதாரணம் தோழர் என். நன்மாறன்.
ஒரு கம்யூனிஸ்டாக 1968-70களில் தன் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு உயர்த்திய அந்த காம்ரேட் இறுதிவரை மக்கள் பணியில் அயராது உழைத்தார்.
மேடை கலைவாணர் என்றழைக்கப்பட்ட தோழர் நன்மாறனின் மேடைப்பேச்சுகளில் நகைச்சுவையும் பகுத்தறிவும் ததும்பும். அவர் பல்வேறு புத்தகங்களை படிக்கும் படிப்பாளி என்பதை விட எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் விசயங்களை எடுத்துரைப்பதில் வல்லவர் என்பதே சிறப்பு.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மதுரையில் உள்ள எளிய மக்களின் கோரிக்கைகள் பல நிறைவேற்ற பட்ட காலம் அது. உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் வசதி கிடைத்திட சட்டமன்றத்தில்
குரல்எழுப்பினார்.
உத்தமபுரம் தீண்டாமை சுவர் இடிப்பிற்கு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியான திமுக வை நோக்கி இவர் ஆற்றிய உரைக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த உரைக்கு பின்தான் "நன்மாறா அது என்ன பெர்லின் சுவரா?" என்ற கேள்வி எழுப்பி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அந்த சுவரை இடிக்க
உத்தரவிட்டார். தீண்டாமை சுவர் இடிக்கச் சொல்லி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டத்திற்கு தோழர் நன்மாறனின் சட்டமன்ற உரை பக்கபலமாக உதவியது @tnueforg
இளைஞர்களை, சிறுபான்மையினரை அணிதிரட்டி சமூக பணிக்களுக்கும் முற்போக்கு அரசியலுக்கும் சரியான பாதை சோசலிச பாதை தான்,
அதற்கு மார்க்சிய தத்துவமும் தான் அடிப்படை என்று சக தோழர்களை ஒருங்கிணைத்தவர்.
அவரின் புகழ்பாடுவது மட்டும் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி அல்ல வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த அவரின் அரசியல் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்டு;
நாமும் மக்கள் பணி செய்ய களத்தில் இறங்குவதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh