{மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
2. ஓம் குஹாய நம: - பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.
30.ஓம் சங்கராத்மஜாய நமஹ: - எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.
31.ஓம் சிவஸ்வாமிநே நமஹ: - தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.
32. ஓம் கணஸ்வாமிநே நமஹ: - சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.
33. ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: - ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர்.
ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.
34.ஓம் ஸநாதனாய நமஹ: - மிகவும் பழமையானவர்.
35. ஓம் அனந்த சக்தயே நமஹ: - அளவற்ற ஆற்றல் படைத்தவர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.
ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.