கடவுளை ஏன் வழிபட வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு சமயமாவது தோன்றி இருக்கக் கூடும்.
நன்றி செலுத்தவே நாம் இறைவனை வழிபட வேண்டும் ..!
வழிபாடு என்பது நமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் இறைஞ்சுவதல்ல.
இறைவன் உயிர்களுக்கு இந்த உலகத்தைப் படைத்துக் கொடுத்திருக்கிறான். உலகில் கோடானு கோடி பொருட்களைப் படைத்துக் கொடுத்திருக்கிறான்.
மனிதப் பிறவியும் கொடுத்து, நாம் கடைத்தேறு வதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, நம்மை இந்த உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கு, இறைவனுக்கு முதலில் நாம் நன்றி செலுத்தவேண்டும்.
வழிபாடு என்பது ஒரு பயிற்சி முறை.
உண்மையான வழிபாடு என்பது வெறும் சடங்குகள் அல்ல.
கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும்.
அதாவது குற்றங்களின்றும் நீங்கி நிறைபெற முயற்சிசெய்தல்.
தீமை செய்யாது விலகி நன்மை செய்தல்.
பல்லுயிரையும் சமமாய்ப் பார்த்து அன்பு செய்தல்.கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள்.
இவற்றைப் பெறுவதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலயம் என்பதை அ - என்பது ஆன்மா என்றும் லயம் - என்பதற்கு சேருவதற்கு உரிய இடம் என்றும் பொருள் கொள்வர்.
எனவே இறைவன் திருவடியில் ஆன்மா லயித்திருப்பதர்க்குரிய இடமே ஆலயமாகும்.
கல்வி கற்கும் இடம் - வித்யாலயம் .
ஞானிகள் வாழும் இடம் - மடாலயம்_
ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சிவன் எழுந்தருளி உள்ள இடம் - சிவாலயம்.