வாழ்வின் சில மறக்க முடியாத தருணங்கள் நமக்கு இன்னும் மறக்காம இருக்கான்னு பாத்துட்டு வருவோம்.
அது பத்தின ஒரு கேள்வி பதில் இழை கீழே..
உங்கள் தனிமனித தரவுகள் ( பெயர்.இடம்.etc) தவிர்த்து பதில் கூறுதல் நலம்.
வாங்க போகலாம். #QAThread#thread
1. பள்ளி வெளியே உள்ள கடைகளிலோ .. பள்ளியின் கதவு அருகே நின்று பாம் பாம் ஹாரன் அடித்து குச்சிமிட்டாய் ஜவ்வு மிட்டாய் விற்பவரிடமோ ..
ப்ரேக் நடுவில் ..வீட்டுக்கு செல்லும்போது இப்படி சமயம் கிடைக்கும்போதுலாம் என்ன வாங்கி சாப்ட்ருக்கீங்க?காசு யார் தருவா?
2. பள்ளி/ கல்லூரி வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் ஏதேனும் தண்டனை / getout of the class/ இன்னபிற திட்டு வாங்கியதுண்டா? எதனால்? என்ன தரப்பட்டது? அப்போ உங்க மனநிலை?
3. பள்ளி தலைமை ஆசிரியர்/ கல்லூரி முதல்வர் அறைக்குள் அழைப்பின் பேரில் சென்றதுண்டா? எதனால் அந்த அழைப்பு?
4. தெருவிலோ ... வீட்டினுள்ளேயோ.. வீட்டுத் தோட்டத்திலோ நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி எதையேனும்ம் உடைத்து மாட்டிக் கொண்டதுண்டா?
5. நண்பர் வீட்டுக்குச் சென்று அங்கே அவர்களுக்காக காத்திருக்கும்போது அவர்களுக்கு அர்ச்சனை நடந்ததுண்டா.. அங்கேயே இருந்தீர்களா? எதுவும் கண்டுகாதது போல எஸ்கேப் ஆ?
6. தெரியாமல் தவறுதலாக யார் வீட்டுக்குச் சென்று கதவிடித்து பின்னர் வழிந்து சமாளித்ததுண்டா? எதனால் அந்தக் குழப்பம் வந்தது?
7. கல்யாண வீட்டுக்குச் சென்றால் உள்ளே நுழைந்து.. முதலில் நீங்கள் செய்துமுடிக்க நினைக்கும் விஷயம் என்ன?
கொண்டுவந்த பரிசு தருவதா?
வந்த சாப்பாடு வேலை பார்ப்பதா?
உறவினர்/ நண்பர் பார்த்து அரட்டையா? வேறு ஏதாவதா?
8. தொடர்வண்டி / விமானம்/ சினிமா தியேட்டர் மாதிரி இடங்களில் உங்கள் இருக்கையில் வேறு ஒருவர் இருந்தாலோ. உங்கள் இருக்கையை மாற்றச் சொல்லிக் கேட்டாலோ நீங்கள் செய்வது என்ன?
9. தெரிந்த நண்பன்.. உறவினன்.. பள்ளி/ கல்லூரி சீனியர் என நினைத்து யாரோ ஒருவரிடம் பார்த்து பேசி அவர்கள் அது இல்லை என்று தெரிந்து மொக்கை வாங்கியது உண்டா?
10. இவரை / இவர்களைச் சந்திக்க வேண்டும் என ரொம்பவும் திட்டமிட்டு யாரைச் சந்தித்தீர்கள்? சந்திக்க விழைகிறீர்கள்?
11. பொது இடத்தில் .உங்களுக்குச் சேவை செய்த ஒருவரிடம் ( ஆட்டோ/ ஒலா/ஹோட்டல் சர்வர்/கடைக்காரர்/ பேருந்து நடத்துநர்/போலீஸ்..இப்படி)
இப்படி யாரிடமாவது வாக்குவாதம்/ சண்டை நடந்திருக்கா? எதனால்? எப்படி நிறைவுக்கு வந்தது?
12. நீண்ட வருடங்களுக்குப் பிறகு எதிர்பாரா தருணத்தில்..எதிர்பாரா இடத்தில், தொடர்பறுந்து போன யாரையாவது சந்தித்து...அக மகிழ்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்று பேசியதுண்டா?
அவ்வளவுதாங்க.. கேள்விகள் எப்படி இருந்தது?
கேட்ட கேள்விகள் உங்கள் நினைவுப்பெட்டகத்தை திறந்துப் பார்த்து அந்த நாள்களுக்கு உங்களை கொண்டு சென்றிருக்கும் என நினைக்கிறேன்.
உங்கள் நேரத்துக்கு நன்றி.
🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh