இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.
கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது.
இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை இம்மலைக் குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.
ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான கோயில் நிறைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களை உத்தேசித்து, நவீன பாணியில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்பாணியில், தமிழகத்திலும் கூட பல நவீன கோயில்கள் கட்டப்பட்டுள்ளன
அத்தகைய கோயில்களில் ஒன்று, சேலத்தில் உள்ள 1008 சிவலிங்கம் கோயில். சேலம் வினாயகா மிஷன் நிறுவனத்தால்,
அவர்களது நிறுவனத்தின் அருகிலேயே, ஒரு சிறிய குன்றின்மேல், சேலம்-சங்ககிரி சாலையில்
அமைக்கப் பட்டுள்ளது, இந்தச் சிவலிங்கங்கள்.
1008 என்றால், நிஜமாகவே 1008! ஆவுடையோடு கூடிய சிவலிங்கங்கள்!
எதிரே ஒரே மாதிரியான அளவில் 1008 நந்திகள்.
1008 மண்டபங்கள்.
மலையின் அடிவாரத்தில் ஆரம்பித்து உச்சியில் முடியும் பொழுது 1008 வந்து விடுகிறது.
அடிவாரம் முதல் உச்சி வரை, சிவலிங்கங்களை தரிசித்தபடியே வாகனத்திலேயே பயணிக்கலாம் தான்.
இருந்தாலும், நேரம் இருந்தால், சிவனின் ஆயிரம் நாமாக்களை உச்சரித்தவண்ணம், ஒவ்வொரு சிவலிங்கத்தினையும் தரிசித்த வண்ணம் மேலே செல்லலாம்.
பின்னனியில் பச்சைப் பசேல் என்ற மலைகளும், சரிவுகளும் அழகும் அமைதியும் தரவல்லன.
ராஜ ராஜேஸ்வரி, மஹாலக்ஷ்மி, பெருமாள் என கண்ணைக் கவரும் கோயில்கள் யாவும் வெகு சுத்தமாக, அற்புதமாக அமைத்தது மட்டுமல்லாமல், அதை அப்படியே நிர்வகித்தும் வருகிறார்கள்.
1008 லிங்கங்களையும், பிரம்மாண்டமான மற்ற கோயில்களையும் பராமரிப்பது சாமாண்ய காரியமா என்ன?
அதுவும் மலைச் சரிவில்! எல்லாவற்றிகும் உச்சமாக, உமையாம்பிகை சமேத, அருணாசல சுந்தரேஸ்வர் மூர்த்தமும் அழகும் பிரமிக்க வைக்கும் பேரழகு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்.
கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால் அவ்விருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள்.
அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும்,