திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்.
கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால் அவ்விருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள்.
அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும்,
அங்கு கோவில் அமைத்து கிருத்திகை நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யும்படியும் கூறிவிட்டு மறைந்தார்.
விடிந்த பிறகு தாங்கள் இருவருக்கும் வந்த கனவை பற்றி அவர்கள் கலந்து பேசிய பிறகு, முருகன் குறிப்பிட்டபடி அருகில் உள்ள மலைக்கு சென்று சுயம்பு வடிவான முருகனை தேடியபோது
அங்கே ஒரு நாகம் சுயம்பு வடிவான லிங்கத்தை பாதுகாத்துக்கொண்டிருந்தது. குருக்களை கண்டதும் அந்த நாகம் படம் எடுத்து ஆடி லிங்கத்திற்கு குடை பிடிப்பது போல காட்சி அளித்தது.
அந்த லிங்கம் தான் கனவில் முருகன் குறிப்பிட்ட சுயம்பு வடிவம் என்பதை உணர்ந்த குருக்கள் இருவரும்
அங்கே சிறியதாக ஒரு குடிசை அமைத்து வழிபாடு நடத்த ஆரமித்தனர்.
காலப்போக்கில் வள்ளி தெய்வானையோடு முருகனின் சிலை வைக்கப்பட்டது.
சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் செங்கம், வில்வாரணி தலத்தில்
லிங்க வடிவ சுப்பிரமணியராக கோலமயில் மேல் ஏறி காலமறிந்து கருணை பொழியும் திருத்தலமான “நட்சத்திரக் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் வில்வாரணி வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை
27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது.
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் பேருந்துகளில் 35 கி.மீ., தூரம் அல்லது வேலூரில் இருந்து 45 கி.மீ., பயணம் செய்து போளூரை அடைந்து, அங்கிருந்து செங்கம் செல்லும் பேருந்துகளிலோ 10 கி.மீ., தூரம் சென்றால்
வில்வாரணியை அடையலாம். பேருந்து நிறுத்தம் அருகிலேயே கோயில் உள்ளது.
இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.
கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது.
இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை இம்மலைக் குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.
ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான கோயில் நிறைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களை உத்தேசித்து, நவீன பாணியில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.