திருமால், ஆவணி நாராயணபுரம் என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.
பிருகு மகரிஷியோடு தேவாதிதேவர்களின் தவத்துக்கு மனமிரங்கி, சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார்.
இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’என வேண்டி நின்றார்.
அதன்பின்னர், அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி அளித்ததன் மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது.
மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க,
லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன் பெயர் ‘பாகூ நதி’.
இது சேயாற்றோடு கலக்குது. இத்திருக்கோயில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆரணியில் இருந்து 12 கிமீ தூரத்தில்
இருக்கிறது இக்கோயில். இம்மலை வடக்கு தெற்காக சிங்கம் ஒன்று படுத்திருப்பது மாதிரி காட்சியளிக்கும்.
கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயம் சுமார் 110 படிகளை கொண்டது.
சுத்தமான சிறிய கருவறை. அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர்.
கருவறையின் எதிரினில் இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர்.
இருவரில் ஒருவர் சிம்ம முகத்துடன் இருக்கின்றார்.
இடப்புறம் லட்சுமி தேவியும் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறாள்.
அழகான பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்வாங்க.
ஆனா, அந்த மகாலட்சுமியே இங்க சிங்க முகம் கொண்டு இருக்கிறாள்.
பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம்.
அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மகாலட்சுமி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு
நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்றாங்க. அதன்படி அறுபது வருடங்களுக்கு ஒரு முறை சர்வதாரி வருடத்தைய ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.
இக்கோயிலில் மொத்தம் 9 நரசிம்மரை தரிசிக்கலாம்,
மூலவரான லட்சுமி நரசிம்மர், உற்சவர், மற்றொரு சிறிய உற்சவர், பஞ்ச நரசிம்மர், மலைமீதிருக்கும் யோக நரசிம்மர் என மொத்தம் 9 நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம்.
இது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படுகின்றனர்.
இங்கு வழிபடுவதன்மூலம் இரண்யவதம் நடந்த அகோபில மடத்தை வழிப்பட்டதன் பலன் கிடைக்கும்.
திருப்பதி அமைப்புப்படியே மலைமேல் சீனிவாசப்பெருமாள் இருக்க, கீழ்ப்புற கோயிலில் அமர்ந்த கோலத்தில் அலர் மேலுமங்கைத் தாயார் வீற்றிருக்கிறார்
பிருகு முனிவரின் தவக்கோலமே இந்த பாறைவடிவம் என்று கூறுகிறார்கள்.
சீனிவாசப்பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு பிராகாரத்தை வலம் வருகையில் பாறையைக் குடைந்து குடவறை கோயில் இருக்கு.
அதுக்குள் போனால், ஸ்ரீ ரங்கத்து ரங்கனையும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளையும், சோளிங்கபுரத்து யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.
எல்லா கோயில்களிலும் தல தீர்த்தம் கோயில் அருகிலேயே இருக்கும்.
ஆனால் இத்தலத்து புண்ணிய தீர்த்தமான பாகூ நதி, இக்கோயிலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கிறது.
வைகானச ஆகம விதிப்படி அமைந்த வடகலை கோயில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றத்தோடு தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?
என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள்.
ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள்.
சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?
சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.
சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவே தான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை.
ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள்.
*குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :*
குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.
அதன் விபரம் :
*தேவையான பொருட்கள்*
எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்..
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு,
அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .
பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்..
சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
சிவபுராணத்தின் பெருமைகள் :
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.