*வெண்மணலாலான சுயம்பு லிங்கம் மற்றும் பீமனின் பிரம்மகத்தி தோஷம் நீக்கிய தலம்*
பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 123ஆவது சிவத்தலமாகும்.
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது.
இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை.
இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன.
இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.
ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாகும்.
இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர், ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது.
சிவபெருமானின் திருமுடி கண்டதாகப் பிரம்மா பொய் கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது.
எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது.
இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை
சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார்.
இதனால் இத்தல சுவாமி “பிரம்மபுரீஸ்வரர்” ஆனார்.
நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன.
இதனால் இத்தலம் “கோளிலி” ஆனது.
இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.
வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இலிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணித் தைலம் சாற்றப்படுகிறது.
மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது.
எனவே இத்தலம் “திருக்குவளை” ஆனது.
சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.
பஞ்ச பாண்டவர்களில் பீமன் பகாசூரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது.
சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை,
திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு
செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார்.
பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.
இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார். மிக அழகிய, சற்றே பெரிய கோயில்.
எதிரில் குளம் உள்ளது.
கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய சன்னிதி.
அழகான ராஜகோபுரம்.
உள்ளே நுழைந்தால் வலப்புரம் வசந்த மண்டபம்.
துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரம்.
நேரே தெரிவது கோளிலிநாதர் சன்னிதி.
தென்பால் தியாகேசர்.
எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாக காட்சி தருகிறார்.
பிரகார வலம் வரும்போது தென்மேற்கில் தியாகவினாயகரும், விஸ்வநாதரும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீஸர் முதலிய சன்னிதிகளும் உள்ளன.
அழகிய முருகன் சன்னிதி.
அது தாண்டி நால்வர், மஹாலட்சுமி சன்னிதிகள்.
அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியது.
தனிக்கோயிலாகவுள்ளது.
சபாநாதர் தரிசனம் அழகானது.
இது கோளிலித்தலமாகையால் நவக்கிரகங்கள் ஒருமுகமாக தென்திசையை நோக்கியுள்ளன.
இறைவன் கர்பக்ரகிரத்தின் வடபுறம் அர்த்தனாரீஸ்வரர், பிரம்மா, துர்கை மற்றும் உமாமகேஸ்வரர் உள்ளனர்.
சுவாமி அம்பாள் கோயில்களுக்கிடையில் அகத்தியர் பூசித்த இலிங்கம் உள்ளது.
அது தனியாக கர்பகிருக, அர்த மண்டபத்துடன் உள்ளது.
சண்டீசர் சன்னிதியும் உள்ளது
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் நாலு ரோடு பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து கொளப்பாடு செல்லும் சாலையில் 9 கீ.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு