கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன.
அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டு துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடிதங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.
மூன்று நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப்படுகிறது.
எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.
ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும்,
ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மயூரநாதர் மற்றும் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சக்தி புரீஸ்வரர் ஆகியோரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
முடவன் முழுக்கு அன்று மயூர நாதர் ஆலயத்தில் இருந்து அம்மையப்பனும் அலங்கார ரதத்தில் துலாக்கட்டத்தில் எழுந்தருள்வார்.
அப்போது காவிரியில் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி நடைபெறும்.
அந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர்.
இதனால் நம்முடைய தலைமுறை பாவங்களும், கர்ம வினைகளும், வம்ச சாபம், பெண் சாபம் யாவும் அகலும் என்கிறார்கள்.
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு