அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர்.
ஸ்ரீ பைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார்.
எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர்.
இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார்.
அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்க, அவருடைய சிரத்தைக் கொய்த பைரவ மூர்த்தியை `பிரம்மசிரக் கண்டீஸ்வரர்’ என்று அழைப்பார்கள்.
பைரவர் பிரம்மனின் தலையைக் கொய்த இடம் கண்டியூர் ஆகும்.
சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதன்மையான தலம் இது.
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள இவ்வூரின் சிவாலயத்தில், மேற்கு பார்த்த சந்நிதியில் சிரக்கண்டீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள்- மங்களநாயகி.
பிரம்மனின் தலையைக் கொய்த பைரவரின் வடிவம் இங்கு உள்ளது.
பிரம்மன், இங்கு திருக்குளத்தை (பிரம்ம தீர்த்தம்) அமைத்து, சிவனாரை வழிபட்டான்.
`கண்டியூர் வீரட்டனாத்து மகாதேவர்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவருள் தரும் பைரவ திருவடிவம்!
சிவாலயங்களுக்குச் சென்று பைரவ திருவடிவை தரிசிப்பதும், வழிபடுவதும், மனதால் தியானிப்பதும் விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும்.
தலை மீது ஜுவாலா முடி, மூன்று கண்கள், மணிகளால் கோக்கப்பட்ட ஆபரணங்கள், பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு, முன்னிரு கரங்களில் சூலம், கபாலம் கொண்டவர் பைரவ மூர்த்தி.
இவரது வாகனமாகத் திகழ்வது நாய். காவல் தெய்வம் என்பதால் காவலுக்கு உதாரணமான நாயை வாகனமாக கொண்டுள்ளார் என்றும்,
வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்வார்கள்.
இவரது வாகனமான நாய் சில தலங்களில் குறுக்காகவும், சில தலங்களில் நேராகவும் காட்சியளிக்கும்.
இன்னும் சில திருத்தலங்களில் நான்கு நாய்களுடன் காட்சி தரும் பைரவ மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
பைரவ மூர்த்தியை ஏன் வணங்க வேண்டும் ?
நம்மை எதிரிகளிடம் இருந்தும் , உடன் இருந்தே தீமை விளைவிக்கும் துரோக சிந்தனை கொண்டவர்களிடம் இருந்தும், மந்திர தந்திரங்களால் விளையும் தீமைகளில் இருந்தும் நம்மை காப்பவர் பைரவ மூர்த்தி.
நமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி.
மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார்.
பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
பைரவ மூர்த்தி சனியின் குரு. ஆகவே ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும்.
சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூசை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூசை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால்
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
விருத்தகிரியில் ஒருநாள் சிவபூசை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும்
ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசயமும் நெசவு தொழிலாளியின் பக்தி சிறப்பை உலகுக்கு உணர்த்த இறைவன் நடத்திய திருவிளையாடல் இத்தலத்திற்கே உடைய சிறப்பாக தல வரலாறு கூறுகிறது
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு