ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு
தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்போது சிவாலயங்க ளில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி துலா உற்சவம் தொடங்கியது.
மயிலாடுதுறையின் காவிரித்துறையின் பெயர் துலாக் கட்டம் எனப் போற்றப்படுகிறது.
மயிலாடுதுறையின் பெருந் திருவிழாவின் பெயர் துலா உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது.
துலா மாதத்தில் வரும் கடை முழுக்கு தீர்த்தவாரித் திருவிழா, ஸ்ரீமயூரநாதர் அபயாம்பிகையின் வருடாந்திரத் திருவிழாவில், மிக முக்கியமான வைபவமாகப் போற்றப்படுகிறது.
மாதம் முழுதும் காவிரியில் தீர்த்தமாடும் இறைவன் மாதத்தின் கடைசி நாளான ஐப்பசி 30ஆம் நாள் கடைமுக தீர்த்தவாரி காண்பதாக ஐதீகம்
இதுவே மயிலாடுதுறையில், முக்கியமான திருவிழாவாகப் போற்றி கொண்டாடப்படுகிறது.
10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடைமுக தீர்த்தவாரி இன்று 16ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு
சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூசை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூசை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால்
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
விருத்தகிரியில் ஒருநாள் சிவபூசை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும்
ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசயமும் நெசவு தொழிலாளியின் பக்தி சிறப்பை உலகுக்கு உணர்த்த இறைவன் நடத்திய திருவிளையாடல் இத்தலத்திற்கே உடைய சிறப்பாக தல வரலாறு கூறுகிறது