ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும்,
அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.
கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு,
அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.
கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..
ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும்.
அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின்
குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம்.
அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா!!!இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்;
நீ மாலை கட்டவேண்டுமே தவிர, சூட்டக்கூடாது ! ” என்று கண்டித்தார்.
"ஸ்வாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் ! ” என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை.
"நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் ! பூ கட்டவேண்டாம் ! ” கட்டளையாக வந்தது .
இதுவும் இறைவன் செயல் என்று, துளசிராமன் நீரிறைக்கும் போதும், தொட்டிகளில் ஊற்றும்போதும், ” "கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான். மனமும் நிறைந்தது!
இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே , அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து..
நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும்.
அர்ச்சகருக்கு கடும் கோபம், "துளசிராமா!!
நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா!
உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே ! ” வைய்ய ஆரம்பிக்க.
துளசிராமன் கண்களில் கண்ணீர்." ஸ்வாமி! நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன்;
உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது! என்றான்.
அவ்வளவுதான் அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரஸாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான்.
இங்கும்…. காய் நறுக்கும்போதும் அவன், " கிருஷ்ணார்ப்பணம் ” என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான்.
அன்று. அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக ……சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் .
மறுநாள் ..அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம்!!
*சித்தர்களை ஏன் நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம்...*
சித்தர்களைப் பற்றிய ஆய்வும், வழிபாடும் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் சித்தர்கள் என்றதும் ‘‘காட்டுக்குள் வாழ்பவர்கள்’’ என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவர்களை நெருங்கக் கூட பயப்பட்டதுண்டு..
சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சித்தர்கள் அனுக்கிரகம் இருந்தால், எந்த இலக்கையும், நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மலர்ந்துள்ளது.
அது மட்டுமல்ல சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால், தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.
*பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம் கயா மட்டுமல்ல, இந்தத் தலமும் தான்*
அகிலத்தில் அனந்தகோடி க்ஷேத்திரங்கள் இருக்க, ‘பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம்’ என்று கயாவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு மகத்துவம் எப்படி வந்தது?
கயாவுக்கு மட்டுமே இது பொருந்துமா?
அல்லது, வேறு ஏதாவது க்ஷேத்திரங்கள் உள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பீட்டாபுரம் குக்குடேஸ்வரர் ஆலயம்.
மகாவிஷ்ணு சக்ராயுதத்தை தாட்சாயினியின் உடலை துண்டு துண்டாக வெட்டிவீழ்த்த, அந்த பாகங்கள் பூமியில் எங்கெங்கு வீழ்ந்தனவோ அவை யாவும் சக்தி பீடங்களாயின என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.
அவ்வாறு, அன்னையின் பிருஷ்ட பாகம் வீழ்ந்த இடமே பீட்டாபுரம்.
தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே #திருமங்கை_ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார்.
அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது.
அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் #திவ்ய_தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.
திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார்.
சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள