பெண்களும் ஆண்களுமாக இலங்கைப் போராளிக் குழுவினர் சிலர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.
நெடிய வலுவான வசீகரமான தோழர் ஒருவர்தான், அவர்களின் தலைவர் என்று அறியப்பட்டார்
தலைவர் என்ற மிதப்பு கண்களில் இல்லை.
உடல்மொழியில் எந்த அதிகாரத் தோரணையும் தென்படவில்லை. குரல் சாந்தமும் மென்மையுமாயிருந்தது. புன்னகை ததும்பும் இதழ்கள் தோழமைக்கு அழைப்பு விடுப்பன போன்றிருந்தன.
அங்கு சூழ்ந்து வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும், அவருக்கும் அவர் குழுவினருக்கும் அணுக்கமாயிருந்தார்கள்.
போராளிக்குழுத் தலைவன் என்றாலும் பாதுகாப்புக்கான எந்த ஆயுதமும், பாராவும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அங்கு வளைய வந்து கொண்டிருந்தார். சென்னைத் தெருகளில் மொபட்டிலும் சைக்கிளிலும் மோட்டார் பைக்கிலும் எளிமையாகப் பயணித்துக்கொண்டிருந்த அவரை, அறிந்தோர் ஓர் அதிசயமாகத்தான் பார்த்தார்கள்.
கோடம்பாக்கம் பாலத்தினருகே இருந்த ஒரு தொழில்நுட்பப் பயிற்சியகத்தில் படித்துக்கொண்டிருந்த அந்த மீசை முதிராத பையன் ஒருநாள் அவரிடம் வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
தெருவில் சந்திப்பதும் வணங்குவதும் உரையாடுவதும் தொடர்கதையாகி விட. அவனைத் தம் தோழர்களோடு தங்கள் இருப்பிடத்திலேயே தங்க வைத்துக்கொண்டார் தலைவர்.
குழுவில் ஒருவனாகிப் போன அவனுக்கும் சேர்த்து சமைத்தார்கள் குழுத் தோழர்கள். சிறுவன் என்பதால் அவனுக்கு இரண்டு அகப்பைச் சோறு பரிமாறப்பட்டது
"என்னடா கப்பல் கவிழ்ந்ததோ? தாடைக்கு முட்டுக்கொடுத்து உட்கார்ந்திருக்காய் ?" என்பார் தலைவர்.
"அண்ணை, இன்ஸ்ட்யூட்டில் பீஸ் தொகை அடைக்கவில்லை! கோவிக்கிறாங்கள்..."
அவன் மேற்கொண்டு படிப்பதற்கான கட்டணத்தையும் செலுத்தி அவனைப் படிக்க வைக்கிற பொறுப்பையும் தனதாக்கிக் கொள்கிறார் தலைவர்
அத்தனை அன்புடன் - அவனை ஒரு மான்குட்டிபோல் தன் வலிய இரு கரங்களில் ஏந்தி அவர் நடப்பதை - அந்தத் தெரு மக்களும் குழுத் தோழர்களும் பலமுறை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
1990. ஜூன் 17.
உளவுத் துறை போலீஸ் வந்து அந்தக் குழுவினரின் இருப்பிடத்தை சோதனையிட்டு அவர்கள் வைத்திருந்த
ஆயுதங்களைக் கைப்பற்றிச் செல்லுகிறார்கள். தலைவரிடமிருந்த பிஸ்டல் ஒன்றை மட்டும் பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ள அனுமதித்துவிட்டு , மற்ற ஆயுதங்கள் அனைத்தையும் அள்ளிச் செல்லுகிறார்கள்.
மறுநாள் ஒரு ரகசியப் பொழுதில்....
அவர்களிடம் அடைக்கலமாகி அன்பைப் பெற்றிருந்த அந்த சிறுவன்,
ரகசிய ட்ரான்ஸ்மீட்டரில் யாரிடமோ தொடர்பு கொள்கிறான். ஆயுதங்கள் அகற்றப்பட்ட சேதியைச் சொல்லுகிறான். யார் யார் எந்த அறைகளில் தங்கியிருக்கிறார்கள், தலைவரின் அறை எது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட அந்த ஒற்றை பிஸ்டல் யாரிடமிருக்கிறது என்கிற எல்லாத் தகவல்களையும் பரிமாறுகிறான் #பங்கர்_கோமாளி
மறுநாள் ஜூன் 19. மாலைக் கருக்கல். இருள் கவியும் முன்பாக
விழுப்புரத்தில் திருடப்பட்ட ஓர் அம்பாஸடர் காரில் வந்த ஆயுதம் தாங்கிய இரண்டுபேர் - போராளிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து தலைவர் உள்ளிட்ட பதின்மூன்று பேரையும் சல்லடைக் கண்களாக, துப்பாக்கித் தோட்டாக்களால்
துளைத்தெடுக்கிறார்கள். வழிந்தோடும் குருதியில், அனைவரும் உயிரற்ற சதைப் பிண்டங்களாகக் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
துப்பாக்கிச்சூட்டின் ஓசை கேட்டு என்னவோ ஏதோவென்று பதறியடித்து வந்த உள்ளூர் மக்கள்மீதும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்துகிறார்கள். ரெண்டுபேர் அங்கேயே செத்து வீழுகிறான்.
வந்த காரியத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் காரில் தப்பியோடியவர்கள், மறவாமல், காட்டிக்கொடுத்த அந்த இளம் எட்டப்பனையும் தங்களோடு அழைத்துச் செல்லுகிறார்கள். அந்தக் காரிலேயே வேதாரண்யம் வரை சாலை வழியாகப் பயணித்த கொலையாளிகள், ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த படகின்மூலம் வட
இலங்கைக்கு தப்பிச் சென்றுவிடுகிறார்கள்.
அதுநாள்வரை கண்டிராத, கதைகளில்கூட வாசித்தறியாத அந்தக் கூட்டுப் படுகொலைகளால் தமிழகமே அதிர்ந்து நின்றது.
கொடுங்கதை இத்தோடு முடியவில்லை.
அந்த இளம் எட்டப்பன் ஆண்டுகள் கழித்து, இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வருகிறான்.
இம்முறை அவன் வந்தது முன்னாள் பிரதமர் ராஜீவகாந்தியை படுகொலை செய்ய!
அவன் பெயர் சாந்தன்.
கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட -
'ராஜிவ் கொலையாளிகள்' என்று சட்டம் சொல்லுகிற -
'அப்பாவி நிரபராதித் தமிழர்கள் ' என்று சிலர் ஜாங்கிரி கொடுத்துக் கொண்டாடுகிற -
ஏழுபேரில் ஒருவனான அதே சாந்தன்
சென்னையில் பதினான்கு பேருடன் கொல்லப்பட்ட போராளிக்குழுவின் தலைவர் பெயர் பத்மநாபா.
EPRLF என்றழைக்கப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா!
#விபிசிங்_நினைவுநாள்
11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்”
எத்தனைக்காலம் பதவியில் வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல.
என்ன செய்தோம் இம்மக்கள் போற்ற என்பதே
#ராஜகுடும்பத்துபிள்ளை
நல்ல வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் களமிறங்கி போராடியவர்
பெரியார்’ ‘வி பி சிங்’
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார்.
மண்டா சமஸ்தான மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார்.
வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார்.காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சி மீது ஈர்ப்பு ஏற்பட்டது
சைவத்திற்கு பெயர்போன ஆதீன மடங்கள், தமிழை உயிராய் வளர்த்த ஆதீனங்கள் எதுவும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ளவில்லை
திருப்பனந்தாள் காசிமடம்! குமாரகுருபரர் காசியில் ஸ்தாபித்த ஆதீன மடமாகும். இன்னமும் தமிழக பக்கதர்கள் தங்கும் சத்திரமும், மூவேளை அன்னதானமும்
கொடுக்கிற தமிழர்களின் காசிமடமாகும். அதன் பீடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்துகொண்டாரா?
திருவாவடுதுறை ஆதீனம்! உலகின் மிகப்பெரிய தமிழ்சுவடி நூலகத்தை கொண்டுள்ளதும், கடைசி மரபுத்தமிழ் ஆசிரியர்களும் கவிராசர்களுமான மகாமகா வித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர்
ஆகியோரால் தமிழ் வளர்க்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் கலந்துகொண்டாரா!?
திருக்கோவிலூர் உவேசாமிநாதன் தமிழறிந்தும், தமிழ்பாடியும், தமிழ் வளர்த்தும் நீண்ட வரலாற்றை கொண்டாடுகிற அனைவரும், உவேசாமிநாதன் கல்விகற்ற திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து யாரேனும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டனரா
இரண்டாம் உலகப் போர் முன்பு ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் கோயபள்ஸ் தலைமையில் நாஜிக் கும்பல் ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்து அதனை காட்சி ஊடகங்களான சினிமா மற்றும் தொலைக்காட்சி மூலம் வழங்கி வந்தனர். தலைசிறந்த ஜெர்மனிய இயக்குனர்கள் பலர் இதற்காக களத்தில் இறக்கி விடப்பட்டனர்
போரில் ஜெர்மன் தோற்கும் வரை ஹிட்லர் செய்தது தேசபக்தியால் தான் என்று நம்பிய ஜெர்மனியர் ஹிட்லர் இழுத்த இழுவைக் எல்லாம் சென்று யூதர்களை துன்புறுத்தினர் தப்பிச் சென்ற அறிவு ஜீவி யூதர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகளாக புகுந்தனர் அவர்களின் குரல் புகலிட நாடுகளில் எடுபடவில்லை
அக்காலத்திய சூப்பர் பவர்களான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ரஷ்ய வளர்ச்சியை தடுக்க ஹிட்லர் பயன்படுவான் என எண்ணி அங்கு நிகழ்ந்த கொடூரங்களை கண்டும் காணாமலும் இருந்தன.
போலந்து வழியான பிரெஞ்சு படையெடுப்பு. ஹிட்லரின் ஸ்கெட்ச் ரஷ்யாவுக்கு அல்ல தனக்குத் தான் என இங்கிலாந்து உணர்ந்தது
19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு முலக்கரம்(முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேராளாவின் சேர்த்தலா என்ற ஊரில்,தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்து கொடுத்து உயிர் விட்ட நங்கவேலி எனும் ஈழவ குல வீர மங்கை.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இன்றைய கேரளாவின், மலபாரில் உள்ள இரண்டு மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அநேக பகுதிகளையும் உள்ளடக்கியது
இங்கு அரசர்கள்,நாயர்கள்,நம்பூதிரிகள் தவிர்த்த மற்ற அனைத்து சாதியினரும் தீண்டப்படாதவர்கள்பார்க்க கூடாதவர்கள்(Unseeable).
அரசர்கள்,நாயர்கள்,தவிர மற்ற சாதியினர் மீசை தாடி வைத்துக்கொள்ளக்கூடாதுசெருப்பு அணியக் கூடாது.குடை பிடித்துச் செல்லக்கூடாது. மீசை தாடி வைக்க தனியாக வரி செலுத்த வேண்டும்.
பெண்கள் திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும்.மேலாடை அணிந்து கொள்ள முலக்கரம் எனும் முலை வரி செலுத்த வேண்டும்.