தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க,
கண்டிக்க
ஏன்...
தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?.
வீட்டிற்கு
யாராவது புதிய ஆள் வந்தாலோ,
ஆண் குரல் கேட்டாலோ
யாரு என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போய் விடுவார்.
தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.
லேட்டாக வீட்டிற்கு வந்தால்,
கதவை தட்டியவுடன் முதல் ஆளாய்
கதவை திறந்து
'ஏன்டா லேட்'
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன்
கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது.
அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.
பாடம் சொல்லி கொடுப்பதாகட்டும், வாத்தியாரிடம் சென்று 'படிக்கலைனா நல்லா அடிங்க' என்று சொல்லிவிட்டு,
பேரன் போன பின்பு 'அடிச்சு கிடிச்சுப்புடாதீங்க;
ஒரு பேச்சுக்கு சொன்னேன்,'' என்று
மறுநிமிடமே வாத்தியாரிடம் மல்லுகட்டும் அந்த தாத்தாவின் அன்புக்கு ஈடு இணையே இல்லை.
டேய் என்ற தாத்தாவின் கம்பீரக்குரலுக்கு
அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி
என அத்தனை பேரும் சர்வ நாடியெல்லாம் அடங்கி பதுங்கி இருந்த காலம் மறக்க முடியாதவை.
தாத்தாவின் குரலுக்கு ஆதரவாய் புதிதாய் வந்த மருமகள்களும் இணைந்து போய், கூட்டுக் குடும்ப உறவுகளும்,
வரவுகளும்
சங்கமிக்கும்.
எந்த ஒரு செயலையும் பக்குவமாய் அணுகி தீர்வு சொல்வது அவர்களின் கைவண்ணம்.
வயதும்,
அனுபவமும்
சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம்.
குடும்ப உறவுகள் அறுந்து போகாமல், நேசங்களும், பாசங்களும் விரிசல் விடாமல் ஆண்டுதோறும் புதுப்பித்து கொண்டிருந்த ஒரே உறவு தாத்தா பாட்டி தான்.
மற்ற குழந்தைகளை விட தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.
தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்து கொள்கிறார்கள்.
தாத்தா, பாட்டி... இப்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஓர் பொக்கிஷமான உறவு.
அந்த உறவு தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டாமல் போனதால் தான் இன்றைய பல குடும்பங்கள்
சுக்கு நுாறாய்
உடைந்து,
சிதறிப் போயிருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களின் மூக்கணாங் கயிற்றை அதிகாரமாக கையில் வைத்திருந்த பல முதியவர்கள் இன்று முதியோர் இல்லங்களில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றனர்.
பாசம், பரிவு, அக்கறை, கலாச்சாரம், ஆரோக்கியம், வாழ்வியல் முறை
என வாழ்க்கைக்கு தேவையான
அனைத்தையும் செயல் முறையில் கற்பிக்கும்
பல்கலைகழகங்கள் தான் #தாத்தா_பாட்டி.
🌹🌹💐🙏💐🌹🌹
Thanks - நெய்வேலி முரளி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*ஒரு முடிவுக்கு வரும் முன்,*
*யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.*
*ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*
*முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.*
*ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.*
ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.*
*ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.*
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.
கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.