எத்தனையோ சிறப்புகளுடன் அமைய பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தியும் தனி சிறப்புடன் அமைய பெற்று இருக்கிறது.
அதாவது கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது.
இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.
சைவ புராணங்களை வெளிப்படுத்தும் கோபுரங்கள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான்உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளது.
கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.
கயிலாய பிரகாரத்தில் இருந்து கோவிலுக்குள் செல்லும் இடத்தில் உள்ளது கண்டராதித்த கோபுரம். இதை தன் கணவர் கண்டராதித்த சோழன் நினைவாக செம்பியன் மாதேவி (கி.பி. 957-1001 இடையே) திருப்பணி செய்தது ராஜராஜ சோழன் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது.
மேலும் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.
இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !
ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற நன்னாளே ரம்பாதிரிதியை.
இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’
இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.
தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.