M.SivaRajan Profile picture
Nov 26 11 tweets 2 min read
#குற்றம்_பொறுத்த_நாதர்

*முல்லை வடிவில் அமைந்த தலைஞாயிறு கொகுடிக்கோயில்*

மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி. தொலைவில் திருக்கருப்பறியலூர் உள்ளது.

இத்தலம் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்குகிறது.
இங்குள்ள ஆலயம் கொகுடிக்கோயில் என்று பெயர் பெறும்.

கொகுடி என்பது ஒருவகை முல்லை.

இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது.

சீகாழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது.

பிராகாரத்தில் சீர்காழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது.
மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டை நாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும்.

இதனாலேயே இத்தலம் மேலைக்காழி என்றழைக்கப்படுகிறது.
தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர்.

தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான்.
அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார்.

இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான்.

அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான்.
இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.

மேலும் இத்தல
இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர்.
தான் லிங்கத்தை கொண்டு வருவதற்குள் சீதை மணலால் லிங்கம் செய்து இராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான்.

அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான்.

ஆனால் முடியவில்லை.

இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது.
இந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள சிவனைக் குறித்து தவம் செய்யும்படி இராமர் அனுமனுக்கு ஆலோசனை கூறினார்.

அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி அனுமனிடம் “தலைஞாயிறு எனப்படும் இத்தலம் சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்” என்று அருள்பாலித்தார்.
அனுமனும் அதன் படி தலைஞாயிறு தலம் வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார்.

அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார்.
இத்தலம் தற்போது “திருக்குரக்கா”‘ என வழங்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர், சுந்தரர் இருவருமே தங்கள் பதிகங்களில் இக்கோவிலை “கொகுடிக்கோயில்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

#குற்றம்_பொறுத்த_நாதர்

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 27
*ஏழுமலையானுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?*

தினமும் நாம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் ‘சாந்தாகாரம் புஜக சயனம்...’ பாடலைச் சொல்லி வழிபட்டு வருகிறோம் எனினும் அதற்கான பொருள் தெரியாது.

அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? Image
‘சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் சுரேசம்
விஸ்வாகாரம் ககன சத்ருசம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்’

இதுதான் நீங்கள் குறிப்பிடும் வரிகள்.
பகவான் விஷ்ணுவினது சாந்தமான உருவம்.

அவர் புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம்.

தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக் கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம்.

அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம்.
Read 10 tweets
Nov 27
அகிலாண்டேசுவரியின் காதில் இரண்டு தோடுகள் போட்டிருப்பதன் ரகசியம்...!

திருவானைக்காவல் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம். Image
பஞ்ச பூதத் தலங்களில் அப்பு(நீர்)தலமாக விளங்குவது திருவானைக்காவல். மூலவர் ஜலகண்டேசுவரராகவும்,
அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.

வராகி அம்சமான அகிலாண்டேசுவரி, ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.
எனவே,பூஜை செய்பவர்களும்,பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.

இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.
Read 7 tweets
Nov 27
#நவகிரக_மந்திரம்

*ஒன்பது நவகிரகங்களுக்கும்*
*ஒரே மந்திரம்*

நமது வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கு நவகிரகங்களின் முக்கிய பங்கு உண்டு.

நவகிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் நாம் நமது வாழ்வில் சரியான இடத்தில் இருப்போம்.
சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் இருக்கும்.

அதனால் தேவையற்ற பல பிரச்சனைகளும் வரும்.

அந்த தோஷங்களை போக்கி வாழ்வை சிறப்பாக மாற்ற உதவும் நவகிரக மந்திரம் ஒன்றுண்டு.
நவகிரக மந்திரம்

‘ஓம் ஹரீம் ஆதித்யாய ச

சோமாய மங்களாய புதாயச

குரு சுக்கிர சனிப்யச்ச

ராகவே கேதவே நமக.’

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜபிப்பது நல்லது.

இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் ஒரு சேர ஒன்பது நவகிரகங்களின் அருளை பெற முடியும்.
Read 5 tweets
Nov 27
#லட்சுமி_நாராயணர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.

இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது. Image
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.

குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
Read 8 tweets
Nov 27
#கங்கையில்_நீராடிய_புண்ணியம்_பெற

* சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தஞ்சை பெரியகோவில் ஆகியவற்றில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது.

இந்த தீர்த்தங்களில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியம் வந்தடையும். Image
* திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், சனி பகவான் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு பெற்றது.

இங்குள்ள கங்கா தீர்த்த குளத்தில் நீராடினால், கங்கையில் மூழ்கி எழுந்த பலன் உண்டாகும்.

* திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரம் என்ற இடத்தில் முக்கூடல் தீர்த்தம் என்னும்
திருவேணி சங்கமத்திற்கு சமமான தீர்த்தம் உள்ளது.

இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய சிறப்பைப் பெற முடியும்.

* சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர்.

இங்கு சவும்யநாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது.

இந்த ஆலயத்தில் மகா கிணறு ஒன்று இருக்கிறது.
Read 5 tweets
Nov 26
#ரம்பா_திரிதியை

இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !

ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற  நன்னாளே ரம்பாதிரிதியை.

இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’

இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.

தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
Read 37 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(