#விபிசிங்_நினைவுநாள்
11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்”
எத்தனைக்காலம் பதவியில் வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல.
என்ன செய்தோம் இம்மக்கள் போற்ற என்பதே
#ராஜகுடும்பத்துபிள்ளை
நல்ல வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் களமிறங்கி போராடியவர்
பெரியார்’ ‘வி பி சிங்’
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார்.
மண்டா சமஸ்தான மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார்.
வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார்.காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சி மீது ஈர்ப்பு ஏற்பட்டது
வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தன்னிடம் இருந்த விளைநிலங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். 1969 இல் தான் தீவிர அரசியல் பயணம் துவங்கியது. அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். தூய்மை, திறமையான அரசியல் என அவரது திறமையை உணர்ந்திருந்த இந்திரா காந்தி தனது அமைச்சரவையில் மத்திய வர்த்தகத்துறைக்கு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வகிக்கும் பணிக்கு நேர்மையாக செயல்படக்கூடியவர் வி.பி.சிங்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் இவரது துரித நடவெடிக்கைகளால் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் களையப்பட்டு விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதனால் நல்ல மதிப்பை பெற்றிருந்தார் வி.பி.சிங்.
#உத்திரபிரதேசமுதல்வர்
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். இதனையடுத்து அம்மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அந்த மாநிலத்தில் கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்து ஆடின. இவற்றை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுத்தார் வி.பி.சிங்.
இந்த தருணத்தில் அவருடைய சகோதரர் கொலை செய்யப்படவே, கொள்ளை சம்பவங்களை ஒழிக்க முடியாததற்கு தானே பொறுப்பேற்று முதல்வர் பணியை ராஜினாமா செய்தார். வெறும் இரண்டு ஆண்டுகளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபடியால் அவரைப்பற்றி நாடு முழுமைக்கும் பேசப்பட்டது.
#பிரதமர்_விபிசிங்
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு அமைந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் இணை அமைச்சராக இருக்கும் போதே கடுமையாக வேலை செய்தவர் நிதி அமைச்சர் ஆனதும் தயவு தாட்சண்யமின்றி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையாக நடவெடிக்கை எடுத்தார்.
திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் சகோதரர் என பல முக்கியஸ்தர்கள் உட்பட பலர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. நிலைகுலைந்த ஆதிக்க சக்தி கள் பிரதமருக்கு நெருக்கடி தர, நிதி அமைச்சர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அங்கும் அவரது வேலை தொடர்ந்தது. இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் போது தான் ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியாகி பெரிய அதிர்வை நாடு முழுமைக்கும் ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க குழு அமைத்தார்.
இந்த விவகாரத்தில் ராஜிவ் காந்தி அவர்களுக்கும் இவருக்கும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வி.பி.சிங் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு ஜன்மோர்ச்சா என்ற புதிய கட்சியை உருவாக்கினார்
அவர் ராஜினாமா செய்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சில மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். அதில் 143 இடங்களை இவர்களது கூட்டணி பெற்றது. ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை ல்லை.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னனி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர சம்மதம் தெரிவித்தன.
இதனால் தேசிய முன்னனி கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் பலம் கிடைத்தது. யார் பிரதமர் என்ற பேச்சு எழும்போது, ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிகாலைபிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தார் விபி சிங்.
பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் தேவிலால். இதனை அடுத்து விபி சிங் பிரதமர் ஆனார். தனித்த பலம் இல்லாதபடியால் இவருக்கு ஆதரவு தந்தவர்கள் தங்களுக்கு தேவையான காரியங்களை செய்துமுடிக்க எண்ணினர். அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி மறுப்பு தெரிவித்தார்
விபி சிங். இவரது நேர்மையான அணுகுமுறை இவரது ஆட்சியை வெறும் 11 மாதங்கள் 8 நாட்கள் மட்டுமே நீடிக்க விட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பார்க்கலாம்.
‘மண்டல் கமிஷன்’ என்று பரவலாக அறியப்பட்ட, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம்
(Socially Backward Classes Commission) சரண் சிங் பிரமதராக இருந்தபோது 1979ல் அமைக்கப்பட்டது.பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 51% வாழ்வதாகவும், அவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று 1980இல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்தது. .
ஆகஸ்ட் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்துகொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.
அப்போதைய அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை சேர்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது. வழங்கப்பட்டது.
ஆனால் மறுபக்கமோ, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கார் அவர்களுக்கு எந்தவித விருதும் கொடுக்கப்படாமல் இருந்தது. இதனை எதிர்த்து, அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது விபி சிங் ஆட்சி. அதோடு நில்லாமல் நாடாளுமன்றத்திலும் அவரது படம் இடம்பெற செய்தது.
சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
கருணாநிதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காவிரி நடுவர் மன்றம்
அமைத்திட ஏற்பாடு செய்தது இவரது ஆட்சியில் தான்.
பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். பஞ்சாபில் அமைதி திரும்ப முன்னெடுப்புகள் எடுத்தார்.
துணிச்சலான முடிவுகளை எடுத்ததனால் இன்றளவும் பேசப்படுகிறார். இடஒதுக்கீடு இருக்கும் வரை வி.பி சிங் பேசப்படுவார்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மொழிப்போர்_1965
மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது .
மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப் பட்டனர் .
அப்பொழுது முதல்வர் #பக்தவச்சலம் .
சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி #கக்கன் இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு.
இது சாதி போராட்டம் இல்லை.
#விவசாயிகள்போராட்டம்_1978
மின் கட்டண உயர்வை எதிர்த்து 77 ல் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் #எம்ஜிஆர் முதல்வர்
#வன்னியர்போராட்டம்_1987
இந்தித் திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்னியர் சங்கம் 1987 ம் ஆண்டு முன்னெடுத்த தனி இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம்..அப்பொழுது முதல்வர் #MGR
18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் .
70 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
#போலிதகவல்_கூலிப்படை 2
21 ம் நூற்றாண்டு அறியாமையின் நூற்றாண்டு. ஒரு பக்கம் மனிதகுலம் இதுவரை சந்தித்திராத தொழில்நுட்ப வளர்ச்சி. இன்னொரு பக்கம் பல நூறு ஆண்டு பழமைத்தனங்களோடு மனிதர்கள். அவர்கள் கைகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய அதிஉயர் சாதனம் வந்துவிடுகிறது, இந்த அதி உயர்
சாதனங்களை கையாள்வது குறித்து அதில் வரும் தகவல்களின் நிதானமாக நுங்குவதற்கான நேரமும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் எப்போதுமே ஒருவிதப் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் நின்று நிதானமாக தர்க பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் நிலை இல்லை.
திடீரென்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் செய்திகள் எந்த நாட்டில் இருந்து எந்த நிறுவனத்தால் உருவாக்கப்படுகின்றன தவறான தகவலோடு மக்களின் பண்பாட்டு உணர்வை தூண்டி அந்த நாட்டின் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய வலிமையான இந்த வீடியோக்களை செய்திகளை உருவாக்குபவர்கள் யார்?
#போலிதகவல்_கூலிப்படை 3
பீகார் சம்பவத்தை தொடர்ந்து ஒரு வழியாக சமூக ஊடக போலி தகவல் மெர்சனரி (கூலிப்படைகள்) குறித்த பேச்சு மையத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறது. வலதுசாரிகள் இந்த விஷயத்தில் எவ்வளவு அட்வான்ஸ்ட்டாக இருக்கிறார்கள் என்பதற்கு இப்போது அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருக்கும்
40,000 டிவிட்டர் அக்கவுண்ட் பற்றிய தகவல்களே சாட்சி..
சமூக ஊடகங்களை பல நாடுகளில் தேர்தல்களுக்கும் வலதுசாரிகளின் நலன்களுக்கும் பயன்படுத்த சர்வதேச அளவிலான நிறுவனங்கள் வந்துவிட்டது குறித்து கார்டியன் இதழ் செய்திருந்த stink ஆபரேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தோம்.
சமூக ஊடகங்களை கையாளும் நம்முடைய பண்பாட்டு பலவீனங்களை வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கி நம்மை எப்படி வலதுசாரிகளின் நலன்களுக்கு அணிதிரட்டுவார்கள் என்பது குறித்தும் சிறுக சிறுக வட மாநில தொழிலாளர் பற்றிய செய்திகளை முதன்மைப்படுத்துவதை வைத்து இன மோதல் வீடியோக்களை உருவாக்குவார்கள்
#நிழல்_யுத்தம்
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் பல போலி வீடியோக்களை பரப்பி இருக்கிறார்கள்.
இங்கு அவர்கள் தமிழர்களை தாக்குவதாக தொடர்ந்து வீடியோக்களை பரப்புகிறார்கள் இதெல்லாம் தற்செயலாக நடப்பதா?
ஒரு கற்பனையாக 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சில
வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெண்ணை சீண்டுவது போல ஒரு வீடியோ வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அது அந்தத் தேர்தலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
இப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசில் நடைபெற்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு
ஒரு வீடியோ அங்கு பரப்பப்பட்டது இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சுகளை பார்களாக மாற்றி விடுவார்கள் என்றும் லெஸ்பியன் ஹோமோ ச***** எல்லாம் சர்ச்சில் நடக்கும் என ஒரு வீடியோ பரப்பப்பட்டது 20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் சில நாட்களில் அந்த வீடியோ 10 கோடி மக்களை சென்றடைந்திருந்தது
#ராஜராஜேந்திரன் திமுகவின் வெற்றி குறித்து நேற்று வெளியிட்ட கட்டுரை @malarvili1998 மூலம் ட்விட்டரில் காண நேரிட்டது. அப்போதுதான் அறிந்தேன் அவர்
முகநூல்களில் மிகவும் பிரபலமான திராவிட எழுத்தாளர் என. இந்தக் கட்டுரை சீமானின் இருப்பு குறித்து அவர் வெளியிட்ட துல்லியமான கணிப்பு
சீமானைக் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
மக்களாட்சியின் கருஞ்சாபம் அவர்.
தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் ?
வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அல்லது தோற்று எதிர்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கானது தேர்தல்
தேர்தல் அரசியலின் சித்தாந்தம் இதுதான்.
தேர்தல் Addict கொண்டோர் சிலர் உண்டு. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி என்பதோ, கட்டுத்தொகை திரும்ப வரவில்லையே என்கிற வருத்தமோ துளி கூட இருக்காது. மாறாக தேர்தலில் வேட்பாளராக பங்கு கொள்வதன் மூலம் மீடியா வெளிச்சம் தன் மீது படும், தன் பெயரை
#விஞ்ஞான_ஊழல்
1970களில் நிரூபிக்கப்படாமலே ஊத்தி மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு 50 ஆண்டாக எம்சியார், ஜெயலலிதா, பன்னீர், எடப்பாடி செய்த ஊழல்களை ஒன்னும் இல்லாதது போல் ஆக்கி கலைஞர் செய்யாத ஊழலா என பரப்பி வருகின்றனர்?
உண்மையில் விஞ்ஞான ஊழல் எது தெரியுமா?
2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே.. வசூல், வசூல்,வசூல். மாத வசூல் கிடையாது.வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்
ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக்