#விபிசிங்_நினைவுநாள்
11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்”

எத்தனைக்காலம் பதவியில் வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல.
என்ன செய்தோம் இம்மக்கள் போற்ற என்பதே
#ராஜகுடும்பத்துபிள்ளை
நல்ல வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் களமிறங்கி போராடியவர்
பெரியார்’ ‘வி பி சிங்’

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார்.
மண்டா சமஸ்தான மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார்.
வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார்.காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.

இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சி மீது ஈர்ப்பு ஏற்பட்டது
வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தன்னிடம் இருந்த விளைநிலங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். 1969 இல் தான் தீவிர அரசியல் பயணம் துவங்கியது. அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். தூய்மை, திறமையான அரசியல் என அவரது திறமையை உணர்ந்திருந்த இந்திரா காந்தி தனது அமைச்சரவையில் மத்திய வர்த்தகத்துறைக்கு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வகிக்கும் பணிக்கு நேர்மையாக செயல்படக்கூடியவர் வி.பி.சிங்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் இவரது துரித நடவெடிக்கைகளால் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் களையப்பட்டு விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதனால் நல்ல மதிப்பை பெற்றிருந்தார் வி.பி.சிங்.
#உத்திரபிரதேசமுதல்வர்
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். இதனையடுத்து அம்மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அந்த மாநிலத்தில் கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்து ஆடின. இவற்றை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுத்தார் வி.பி.சிங்.
இந்த தருணத்தில் அவருடைய சகோதரர் கொலை செய்யப்படவே, கொள்ளை சம்பவங்களை ஒழிக்க முடியாததற்கு தானே பொறுப்பேற்று முதல்வர் பணியை ராஜினாமா செய்தார். வெறும் இரண்டு ஆண்டுகளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபடியால் அவரைப்பற்றி நாடு முழுமைக்கும் பேசப்பட்டது.
#பிரதமர்_விபிசிங்
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு அமைந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் இணை அமைச்சராக இருக்கும் போதே கடுமையாக வேலை செய்தவர் நிதி அமைச்சர் ஆனதும் தயவு தாட்சண்யமின்றி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையாக நடவெடிக்கை எடுத்தார்.
திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் சகோதரர் என பல முக்கியஸ்தர்கள் உட்பட பலர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. நிலைகுலைந்த ஆதிக்க சக்தி கள் பிரதமருக்கு நெருக்கடி தர, நிதி அமைச்சர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அங்கும் அவரது வேலை தொடர்ந்தது. இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் போது தான் ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியாகி பெரிய அதிர்வை நாடு முழுமைக்கும் ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க குழு அமைத்தார்.
இந்த விவகாரத்தில் ராஜிவ் காந்தி அவர்களுக்கும் இவருக்கும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வி.பி.சிங் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு ஜன்மோர்ச்சா என்ற புதிய கட்சியை உருவாக்கினார்
அவர் ராஜினாமா செய்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சில மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். அதில் 143 இடங்களை இவர்களது கூட்டணி பெற்றது. ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை ல்லை.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னனி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர சம்மதம் தெரிவித்தன.
இதனால் தேசிய முன்னனி கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் பலம் கிடைத்தது. யார் பிரதமர் என்ற பேச்சு எழும்போது, ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிகாலைபிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தார் விபி சிங்.
பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் தேவிலால். இதனை அடுத்து விபி சிங் பிரதமர் ஆனார். தனித்த பலம் இல்லாதபடியால் இவருக்கு ஆதரவு தந்தவர்கள் தங்களுக்கு தேவையான காரியங்களை செய்துமுடிக்க எண்ணினர். அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி மறுப்பு தெரிவித்தார்
விபி சிங். இவரது நேர்மையான அணுகுமுறை இவரது ஆட்சியை வெறும் 11 மாதங்கள் 8 நாட்கள் மட்டுமே நீடிக்க விட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பார்க்கலாம்.

‘மண்டல் கமிஷன்’ என்று பரவலாக அறியப்பட்ட, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம்
(Socially Backward Classes Commission) சரண் சிங் பிரமதராக இருந்தபோது 1979ல் அமைக்கப்பட்டது.பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 51% வாழ்வதாகவும், அவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று 1980இல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்தது. .
ஆகஸ்ட் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்துகொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.

அப்போதைய அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை சேர்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது. வழங்கப்பட்டது.
ஆனால் மறுபக்கமோ, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கார் அவர்களுக்கு எந்தவித விருதும் கொடுக்கப்படாமல் இருந்தது. இதனை எதிர்த்து, அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது விபி சிங் ஆட்சி. அதோடு நில்லாமல் நாடாளுமன்றத்திலும் அவரது படம் இடம்பெற செய்தது.
சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.

கருணாநிதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காவிரி நடுவர் மன்றம்
அமைத்திட ஏற்பாடு செய்தது இவரது ஆட்சியில் தான்.
பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். பஞ்சாபில் அமைதி திரும்ப முன்னெடுப்புகள் எடுத்தார்.
துணிச்சலான முடிவுகளை எடுத்ததனால் இன்றளவும் பேசப்படுகிறார். இடஒதுக்கீடு இருக்கும் வரை வி.பி சிங் பேசப்படுவார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Nov 26
#பங்கர்_கோமாளி
சென்னை. கோடம்பாக்கம். ஜக்கரியா காலனி.

பெண்களும் ஆண்களுமாக இலங்கைப் போராளிக் குழுவினர் சிலர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

நெடிய வலுவான வசீகரமான தோழர் ஒருவர்தான், அவர்களின் தலைவர் என்று அறியப்பட்டார்
தலைவர் என்ற மிதப்பு கண்களில் இல்லை.
உடல்மொழியில் எந்த அதிகாரத் தோரணையும் தென்படவில்லை. குரல் சாந்தமும் மென்மையுமாயிருந்தது. புன்னகை ததும்பும் இதழ்கள் தோழமைக்கு அழைப்பு விடுப்பன போன்றிருந்தன.

அங்கு சூழ்ந்து வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும், அவருக்கும் அவர் குழுவினருக்கும் அணுக்கமாயிருந்தார்கள்.

#பங்கர்_கோமாளி
போராளிக்குழுத் தலைவன் என்றாலும் பாதுகாப்புக்கான எந்த ஆயுதமும், பாராவும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அங்கு வளைய வந்து கொண்டிருந்தார். சென்னைத் தெருகளில் மொபட்டிலும் சைக்கிளிலும் மோட்டார் பைக்கிலும் எளிமையாகப் பயணித்துக்கொண்டிருந்த அவரை, அறிந்தோர் ஓர் அதிசயமாகத்தான் பார்த்தார்கள்.
Read 15 tweets
Nov 24
#அண்ணாமலைக்கு_அரோகரா
By
#Periyar_Saravanan

பார்ப்பனர்களுக் கென்று தனியாக அரசியல் இயக்கம் என்கின்ற ஒன்று இருந்ததில்லை.

எல்லாக்கட்சியிலும் ஊடுறுவி தங்களது நிலையைத் தக்கவைத்து வந்தார்கள்.

அதிலெல்லாம்கூட இரண்டாம் நிலை என்கின்ற இடத்திலேதான் இருந்து வந்தார்கள்.
சூத்திரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலையே இருந்து வந்தது.

இதனால் பல அரசியல் முடிவுகளை சுயமாக எடுப்பதில் பார்ப்னர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது,

அந்த நேரத்தில் தான் தமிழகத்திற்கு பி.ஜெ.பி. அறிமுகமாயிற்று.

இத்தனை ஆண்டுகள் தாங்கள் நக்கிப் பிழைத்த கட்சிகளை
எல்லாம் பலிவாங்கவும், தங்கள் அரசியல் தளத்திற்கான நல்ல வாய்ப்பாகவும் நினைத்து,

பி.ஜெ.பி.யைப் பயன் படுத்தவும், பலப் படுத்தவும் தொடங்கினர்.
நாமும் பார்ப்பனர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது.

RSSயை முழுமையாகப் பயன் படுத்தி, அவர்களைக் களத்தில் இறக்கி உறுதி யான அர்ப்பனிப்புள்ள
Read 9 tweets
Nov 23
தமிழ்ச் சமூகத்தில் தாய்மாமனுக்கான இடமே தனி ; நாட்டுப்புற மரபில் அவன் தந்தைக்கு நிகரானவன் ; சில நேரங்களில் அதற்கும் மேலானவன்..

' மாமன் அடிச்சாரோ மல்லிகைப் பூச்செண்டாலே '

என்று அவன் அடிப்பதைக் கூட ' மென்மையாகவே பாடியிருக்கிறார்கள் பெயர் தெரியாத நாட்டுப்புறக் கவிஞர்கள்
குழந்தை தொடர்பான அனைத்து சடங்குகளும் தாய் மாமனோடு தொடர்புடையதே

ஆட்டுப் பால் குடிச்சா
அறிவழிஞ்சு போகுமுன்னு
எருமைப் பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம் பசுவோட்டி வாராண்டி

வெள்ளிச் சங்கு செஞ்சா
வெளக்கி வைக்க வேணுமின்னு
தங்கத்தில் சங்கு செஞ்சு
தாராண்டி
என்று சீர் சுமந்தே கடன்காரனான தாய் மாமன்களும் உண்டு..'

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா ?

என்று குறுகிய வட்டத்திற்குள் நிற்க வைத்து ' முடிந்தால் இவனை மட்டும் காதலித்துக் கொள் ' என்று நிர்பந்திக்கப்பட்ட மருமகள்களும் உண்டு.

70களில் தொடங்கி 2000 வரை சினிமா நாயகிகள்
Read 19 tweets
Nov 21
#ஒம்போது_ஆதீனங்கள்

சைவத்திற்கு பெயர்போன ஆதீன மடங்கள், தமிழை உயிராய் வளர்த்த ஆதீனங்கள் எதுவும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ளவில்லை

திருப்பனந்தாள் காசிமடம்! குமாரகுருபரர் காசியில் ஸ்தாபித்த ஆதீன மடமாகும். இன்னமும் தமிழக பக்கதர்கள் தங்கும் சத்திரமும், மூவேளை அன்னதானமும்
கொடுக்கிற தமிழர்களின் காசிமடமாகும். அதன் பீடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்துகொண்டாரா?

திருவாவடுதுறை ஆதீனம்! உலகின் மிகப்பெரிய தமிழ்சுவடி நூலகத்தை கொண்டுள்ளதும், கடைசி மரபுத்தமிழ் ஆசிரியர்களும் கவிராசர்களுமான மகாமகா வித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர்
ஆகியோரால் தமிழ் வளர்க்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் கலந்துகொண்டாரா!?

திருக்கோவிலூர் உவேசாமிநாதன் தமிழறிந்தும், தமிழ்பாடியும், தமிழ் வளர்த்தும் நீண்ட வரலாற்றை கொண்டாடுகிற அனைவரும், உவேசாமிநாதன் கல்விகற்ற திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து யாரேனும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டனரா
Read 6 tweets
Nov 18
இரண்டாம் உலகப் போர் முன்பு ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் கோயபள்ஸ் தலைமையில் நாஜிக் கும்பல் ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்து அதனை காட்சி ஊடகங்களான சினிமா மற்றும் தொலைக்காட்சி மூலம் வழங்கி வந்தனர். தலைசிறந்த ஜெர்மனிய இயக்குனர்கள் பலர் இதற்காக களத்தில் இறக்கி விடப்பட்டனர்
போரில் ஜெர்மன் தோற்கும் வரை ஹிட்லர் செய்தது தேசபக்தியால் தான் என்று நம்பிய ஜெர்மனியர் ஹிட்லர் இழுத்த இழுவைக் எல்லாம் சென்று யூதர்களை துன்புறுத்தினர் தப்பிச் சென்ற அறிவு ஜீவி யூதர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகளாக புகுந்தனர் அவர்களின் குரல் புகலிட நாடுகளில் எடுபடவில்லை
அக்காலத்திய சூப்பர் பவர்களான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ரஷ்ய வளர்ச்சியை தடுக்க ஹிட்லர் பயன்படுவான் என எண்ணி அங்கு நிகழ்ந்த கொடூரங்களை கண்டும் காணாமலும் இருந்தன.
போலந்து வழியான பிரெஞ்சு படையெடுப்பு. ஹிட்லரின் ஸ்கெட்ச் ரஷ்யாவுக்கு அல்ல தனக்குத் தான் என இங்கிலாந்து உணர்ந்தது
Read 10 tweets
Nov 14
#தோள்சீலை_புரட்சி #குப்பாய_புரட்சி

19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு முலக்கரம்(முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேராளாவின் சேர்த்தலா என்ற ஊரில்,தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்து கொடுத்து உயிர் விட்ட நங்கவேலி எனும் ஈழவ குல வீர மங்கை.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இன்றைய கேரளாவின், மலபாரில் உள்ள இரண்டு மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அநேக பகுதிகளையும் உள்ளடக்கியது

இங்கு அரசர்கள்,நாயர்கள்,நம்பூதிரிகள் தவிர்த்த மற்ற அனைத்து சாதியினரும் தீண்டப்படாதவர்கள்பார்க்க கூடாதவர்கள்(Unseeable).
அரசர்கள்,நாயர்கள்,தவிர மற்ற சாதியினர் மீசை தாடி வைத்துக்கொள்ளக்கூடாதுசெருப்பு அணியக் கூடாது.குடை பிடித்துச் செல்லக்கூடாது. மீசை தாடி வைக்க தனியாக வரி செலுத்த வேண்டும்.
பெண்கள் திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும்.மேலாடை அணிந்து கொள்ள முலக்கரம் எனும் முலை வரி செலுத்த வேண்டும்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(