குபேரனும் அஷ்டலட்சுமிகளும் செல்வத்தை மக்களுக்கு வழங்குவதால் அவ்வப்போது குறையும் செல்வத்தை நிரப்பிக் கொள்ள திரும்ப வழிபடுவதும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரையே.
நவநிதிகளில் இருபெரும் நிதிகளான சங்கநிதி, பத்மநிதியை ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையை சற்றே அணைத்த வாறு தன் மேல் திருக்கரங்களில் தாங்கி இருப்பவர்.
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!
இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே.
பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.
செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.
நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.
இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.
தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.
பரிகார முறை :
புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
*இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க அருள் புரியும் கள்ள விநாயகர்*
திருக்கடையூர் கள்ள வாரண விநாயகர்
அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், அமிர்தம் அருந்த இந்திராதி தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகப் பெருமானை முதலில் வழிபட மறந்து விட்டனர்.
இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகப் பெருமான் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.
விநாயகரின் இந்த லீலை பற்றி அறிந்த மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார், “முதலில் விநாயகரை வழிபடுங்கள்; அவரே மனமிரங்கி அமிர்தம் தருவார்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர், வழிபாடும் செய்தனர்.
மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.
குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை.
இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லை யாவும் நீங்கும்.
குரு பகவானின் ஆதிக்கம் உடையது இந்த மூலிகை.
மூலிகை சக்தி ரகசியங்களில் காணும் போது, 'அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்...’, 'கல்லாலம் இருக்கும் இடத்தில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையேது...’
எனத் திகழும் வாசகங்களால் இதன் மகத்துவத்தை அறியலாம்.
இந்தக் கல்லால மூலிகை, ஆண் வகை, பெண் வகை, மலட்டு வகை என மூன்று வகைப்படும்.
சொரசொரப்பானவை ஆண் வகை;
இலையுடன் காய் இருப்பது மலட்டு வகை;
மிருதுவாக வழவழப்புடன் காணப்படுவது பெண் வகை.
இவற்றில், பெண் வகை மரத்தின் இலைகள், லட்சுமி கடாட்சம் மிகுந்ததாகும் என்பர்.