தொடி, ஒருவட, இருவட, மூன்றுவட ஆரங்கள், வளை, மகரக்குழை (காதணி), காற்சரி எனப்படும் பாதசரம், கிண்கிணி, சிலம்பு ஆகிய அணிகலன்கள் சங்ககால சிறார்களால் அணியப்பெற்று அழகிற்கு அழகு ஊட்டின என்பதை சங்கப்பாடலடிகள்வழி நாம் அறியலாம்.
கீழ்க்காணும் #கலித்தொகை பாடல், தாய் தன் செல்வ மகனுக்கு அணிவித்து அழகு பார்த்த அணிகலன்களைப் படம் பிடித்துக்காட்டும்.
பொடிவைத்து இணைக்கப்பட்டமை அறியா வண்ணம், மீளவும் நெருப்பிலிட்டு ஒளிபெறச் செய்யப்பட்ட பொன்னாலான, இரு வடங்களில் அமைந்த #காற்சரி எனப்படும் #பாதசரம்.
'பொடி அழற்புறம் தந்த' என்ற தொடரால் அணிகலன்களின் பகுதிகள் பொடிவைத்து ஊதி ஊதி இணைக்கப்பட்டன என்பதும்,
அப்படிச் செய்தமை புலப்படா வண்ணம் மீண்டும் செந்தழலில் இடப்பட்டு ஒளியூட்டப்பட்டன என்றதுமான அன்றைய சிறந்த தொழில்நுட்பம் அறியப்படுகிறது.
"தேரைவாய்க் கிண்கிணி ஆர்ப்ப" - கலித்தொகை
(தேரை வாயைப் போன்றது கிண்கிணி என்னும் காற் சலங்கை)
#கலித்தொகை மட்டுமின்றி மற்றைய சங்கப்பாடல்களிலும் #கிண்கிணி பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
"தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி" - குறுந்தொகை
(தவளையின் வாயைப் போன்ற, பொன்னாலான கிண்கிணி)
தவளை வாயைப் போன்ற பொற்கூடும் அதற்குள் உருண்டு ஒலி எழுப்பும் பொன்மணிகளும் உடையதுமான, சிறுவர்களுக்கு அணிவிக்கப்படும் இக்காலத்திய #சதங்கைகள் இவண் நினையத்தகும்.
பொன்னால் செய்யப்பெற்ற கிண்கிணி (#சதங்கை) அழகு செய்யும் சிவந்த அடிகள் என்று அகநானூறு #கிண்கிணி பற்றிக் குறிப்பிடுகிறது.
கைவேலைப்பாடு மிகுந்த பொற்காசுகளையும், அதன் மேல் மாசற்ற பவழங்களையும் கோத்து இடுப்பில் கட்டப்படும் #அரைஞாண் என்பது இவ்விரு அடிகளின் பொருள்.
#வாள்உரு, #மழுஉரு போன்றவற்றை நெருக்கக்கட்டி, அவற்றின் இடையில் கருஞ்சிவப்பு நிறமுடைய #தம்பலப்பூச்சி போன்ற தகட்டிலே காளை இலச்சினையிட்ட, கழுத்தில் அணியும் சங்கிலி, அத்தோடல்லாமல்...
கருங்கடல் முத்தும், பலவகை மணிகளும் கோத்த மூன்று வட மாலை, வேலைப்பாடுகள் மிகுந்த கழுத்து அணி, அரைஞாண், காற்சரி ஆகியவற்றைத் தன் செல்வமகனுக்கு அணிவித்து மகிழ்ந்தாள் சங்ககாலத் தாய்.
இக்காலத்தும் செல்வர் வீட்டுச் சிறார்களுக்கு இவ்வணிகளையே அணிவித்து அழகு பார்க்கின்றனர் அவர்களின் தாயர்.
புறப்பாடல் ஒன்றிலும் சிறார் அணியும் சங்கிலி பற்றிய குறிப்பு ஒன்று உளது.
"புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார்"
#புலிப்பல் கோக்கப்பட்ட சங்கிலி; இதுவும் இக்காலத்துச் சிறார்களும், காளைப் பருவத்தினரும் அணியும் அணிகலன்களில் ஒன்றே...!
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,
மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற...
#தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.
#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.
இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
முனைவர் இரா. மதிவாணன்
தமிழிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
கேரளாவில் உள்ள #எடக்கல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "கடும்மி புத சேர்" என்ற தமிழிக் கல்வெட்டின் இறுதியில்...