நமது பாவத்தையும், பிரச்னையும் தீர்க்ககூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொல்வார்கள்.
ஆம் கடவுள் இல்லாத இடத்தில் நமக்கு பாதுகாப்பு இல்லை என்பது அதன் பொருள்.
அதுபோலவே அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும்.
பூக்களாலும் குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.
அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.
கோவிலுக்குச் சென்று ஒருவர் தனது குலம் கோத்திரம், பெயர் ,நட்சத்திரத்தை சொல்லி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
ஒருவர் கோத்திரத்தை சொல்லும் போது அது அவரது பரம்பரையைக் குறிக்கிறது.
அவர் பிறந்த நட்சத்திரத்தையும்,பெயரையும் சொல்லும் போது அவருக்கென தனி அடையாளத்தை கொடுக்கிறது.
அர்ச்சகர் சங்கல்பம் செய்யும் போது நிகழ் காலத்தை பற்றிய விவரங்களை கூறுகிறார்.
ஆகவே ஒரு மனிதர் தனது கோத்திரம், நட்சத்திரம், பெயர் ஆகியவற்றை சொல்லி தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.
இதனால் அவர்கள் தனது கோரிக்கைகளை இறைவனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி பலனை பெறுகின்றனர்.
அர்ச்சனை எனபது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும் போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும்.
மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள்.
அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்க கூடும்.
அல்லது இன்னும் தமது வாழ்வில் உயர்வதற்காகவும் இருக்கும்.
துன்பங்களை தாங்கும் மன உறுதி கொடுக்கக்கூடியதும் ஆகும்.
ஒரு சிலர் இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள்.
அது தான் மட்டும் நல்லாயிருந்தால் போதாது எல்லோரும் எல்ல வளமும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கின்றனர்.
கோயிலில் அர்ச்சனை செய்வது என்பது வீட்டில் பூசை செய்வதை காட்டிலும் சக்தி பெற்றது.
அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனாங்களாலும் ,பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக இருக்கிறது.
கேட்டதை கொடுக்கும் ஆற்றல் உண்டு.
சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை கொடுக்கிறார்கள்.
இது பரிஹாரம் போன்றது ஆகும்.சஷ்டி அன்றும் பிரதோஷம் நாளிலும் இப்படி செய்வதை நாம் பார்க்க முடியும்.
ஒருவர் தான் பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நலத்தைக் கொடுக்கும்.
அந்த நட்சத்திர நாதன் ஆசிகளை அள்ளி வழங்குவார் என்பது ஐதீகம்.
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!
இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே.
பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.
செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.
நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.
இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.
தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.
பரிகார முறை :
புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
*இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க அருள் புரியும் கள்ள விநாயகர்*
திருக்கடையூர் கள்ள வாரண விநாயகர்
அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், அமிர்தம் அருந்த இந்திராதி தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகப் பெருமானை முதலில் வழிபட மறந்து விட்டனர்.
இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகப் பெருமான் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.
விநாயகரின் இந்த லீலை பற்றி அறிந்த மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார், “முதலில் விநாயகரை வழிபடுங்கள்; அவரே மனமிரங்கி அமிர்தம் தருவார்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர், வழிபாடும் செய்தனர்.
மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.
குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை.
இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லை யாவும் நீங்கும்.
குரு பகவானின் ஆதிக்கம் உடையது இந்த மூலிகை.
மூலிகை சக்தி ரகசியங்களில் காணும் போது, 'அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்...’, 'கல்லாலம் இருக்கும் இடத்தில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையேது...’
எனத் திகழும் வாசகங்களால் இதன் மகத்துவத்தை அறியலாம்.
இந்தக் கல்லால மூலிகை, ஆண் வகை, பெண் வகை, மலட்டு வகை என மூன்று வகைப்படும்.
சொரசொரப்பானவை ஆண் வகை;
இலையுடன் காய் இருப்பது மலட்டு வகை;
மிருதுவாக வழவழப்புடன் காணப்படுவது பெண் வகை.
இவற்றில், பெண் வகை மரத்தின் இலைகள், லட்சுமி கடாட்சம் மிகுந்ததாகும் என்பர்.