“முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம்” என்றார்.
முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம்.
உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.
முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார்.
“நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.
''ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே.
இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?” என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.
''அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?” என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு, மகிழ்ச்சியாய் சென்றனர்.
''இருள்நீங்க இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.-----வள்ளுவர்''
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.
🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
அடியார்க்கும் அடியேன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*ஒரு முடிவுக்கு வரும் முன்,*
*யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.*
*ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*
*முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.*
*ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.*
ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.*
*ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.*
தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க,
கண்டிக்க
ஏன்...
தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?.
வீட்டிற்கு
யாராவது புதிய ஆள் வந்தாலோ,
ஆண் குரல் கேட்டாலோ
யாரு என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போய் விடுவார்.
தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.
லேட்டாக வீட்டிற்கு வந்தால்,
கதவை தட்டியவுடன் முதல் ஆளாய்
கதவை திறந்து
'ஏன்டா லேட்'
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன்
கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது.
அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.
கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.