M.SivaRajan Profile picture
Dec 3 20 tweets 3 min read
#கர்ம_வினை

🌹 *கர்மவினைகளை ஒருவன் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டுமா?......என பரந்தாமனிடம் கேட்கும் எளிய பக்தனின் கதை* 🌹

🌺 விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை
விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில்

நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தபோதிலும்
அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது
வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

🌺 வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான்.
🌺 எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து
கொண்டன.

🌺 அதே ஊரில் அவனுக்கு குமணவித்தன் என்ற சூழ்ச்சி
குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

🌺 தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்யும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

🌺 இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை.

அவனுக்கு தன் நண்பன்
ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

🌺 கோபத்தில் வெகுண்டெழுந்த ஞானசித்தன் ஸ்ரீ கிருஷ்ணன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய்
என்று சாபமிட தொடங்கினான்.
🌺 சிரித்துக் கொண்ட குமணவித்தன் அப்படி நடக்கவில்லை
என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக் கொண்ட ஞானசித்தன் தீவிரமான
பிராத்தனையில் ஈடுபட்டான்.
🌺 போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
குமணவித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.

🌺 வரும் வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான்.
உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான்.

🌺 கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை
பார்த்து, அதையும் மூட்டையாக
கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.
🌺 இதற்கிடையே வயலில்
வேலை செய்துகொண்டிருந்த
ஞானசித்தனை மாடுமுட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆகி விட்டான்.

🌺 இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று ஞானசித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள்.

தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதான்.
🌺 தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் ஞானசித்தன்.

உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்துகொள்ள முடியவில்லை.

🌺 எப்படியோ எழுந்து
தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான்.

திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான்.
🌺 ஆம் எந்த ஸ்ரீ கிருஷ்ணனை அவன் பக்தியுடன் அனுதினமும்
வணங்கினானோ அதே பரந்தாமன் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தார்.

🌺 உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு அவரை வணங்க
தோனவில்லை, மாறாக பரந்தாமனிடம் சண்டை போட
தொடங்கினான்.
🌺 தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொறுமையுடன்
கேட்டுகொண்டிருந்த பரந்தாமன்
அவனை தன்னோடு அனைத்து கொண்டார்.

பரந்தாமனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் ஞானசித்தன்.
🌺 இப்பொழுது பரந்தாமன் பேச தொடங்கினார்,

ஞானசித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

🌺 நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது.

மாறாக உன் நண்பன் குமணவித்தனோ முன்பிறவியில்
நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது.

மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

🌺 என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ
அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெரும்பாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,

மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய்.
🌺 ஆன்மீகத்தை தொடங்கும்
ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே அனுபவிக்க தொடங்குகிறான்,

மாறாக
அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்த பின்பு தான்
அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.
🌺 உன் நண்பனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டு மொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது.

🌺 இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன.
இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் பரந்தாமன்.

🌺 நாட்கள் செல்ல செல்ல ஞானசித்தனின் உடல்நிலை
நலம் பெற தொடங்கியது.

அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் ஞானசித்தனுக்கு
கிடைத்தது.
நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள்.

🌺 அதே சமயத்தில்
குமணவித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான்.

அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும்
பறித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
🌺 தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய ஞானசித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

🌺 ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது.

அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
🌺 ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு.

அது தான் " #இறைபக்தி" நம் இறைபக்தி நம்மை அனைத்து வினைகளிலிருந்தும் நம்மை விலக்கும், பரந்தாமனை நோக்கிய நமது பிரார்த்தனை நம்மை பகவானை நோக்கி மேம்படுத்தும்.

#கர்மவினை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 3
#மோஷம்_தரும்_நாராயண_நாமம்

பகவானின் லீலைகளையும் அவனது நாமத்தின் மகிமைகளை பற்றியும் சொல்வதற்கு ஒரு ஜென்மம் போதாது !!

நாராயண நாமம் இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது.

இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார்.

இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார்.
அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும்.

அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது.

அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர்.
Read 14 tweets
Dec 3
#திருமண்

வைணவ சமயத்தில் நாமம் இட்டுக்கொள்வது வழக்கம்.

இதனை வைணவர்கள் ‘திருமண் காப்பு தரித்தல்’ என்கின்றனர்.

வைணவத்தின் முதல் கடவுளாக நாராயணன் (விஷ்ணு) வணங்கப்பட்டு வருகிறார்.

திருமண் எனும் திருநாமம் திருமாலின் பாதங்களைக் குறிக்கிறது.
திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கின்றனர். இது மஹாலட்சுமியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

உவர் மண் நம் உடையில் உள்ள அழுக்கை எப்படிப் போக்குகிறதோ, அதே போன்று, நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை இந்தத் திருமண் தூய்மையாக்குகிறது.
இறைவன் நாராயணனின் பாதத்தைக் குறிக்கும் இந்தத் திருமண், நம் உடல் ஒரு நாள் இந்த மண்ணோடு மண்ணாகிப்போகும் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அணியப்படுகிறது.

அதனால் நாராயணின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்பதை அறிவுறுத்துவதுதான் திருமண் காப்பாகும்.
Read 6 tweets
Dec 2
#சிவ_தீட்சை

சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா. சென்னையில்.*

சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது.
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*

சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.

*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*
Read 4 tweets
Dec 2
#பிரம்ம_முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.

பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை.

இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மனதின் பிரச்னைகளை அகற்றவும் இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும்,

இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம்.

இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.
படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்..

இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்க வேண்டும்.

அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்.
Read 34 tweets
Dec 2
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்...!!

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே.

பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.

செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.
நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.

இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.
தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.

பரிகார முறை :

புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
Read 8 tweets
Dec 2
திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அம்மன்
 
நத்தம் மாரியம்மன் கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

சிறிய அளவிலான இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் ராஜகோபுரங்களோ, தங்க விமானங்களோ கிடையாது.

கருவறையின் முன்பாக சிறிய அளவில் ஒரு மண்டபம் மட்டும் உள்ளது.

இந்த மண்டபமும் ஓடுகளால் வேயப்பட்டது ஆகும்.

கருவறையில் மூலவரான மாரியம்மன், திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அன்னத்தின் மீது வீற்றிருக்கிறார்.
உற்சவரான அம்பாள் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அம்மன் கோவில் என்பதால் கருவறைக்கு கிழக்கு பகுதியில் விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இடது புறத்தில் நவக்கிரக நாயகர்களுக்கான சன்னதியும் உள்ளது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(