திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷங்கள் தீரவும் ஸ்ரீ ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், உதயமார்த்தாண்டபுரத்தில் உள்ளது இக்கோயில்.
கோயிலின் கிழக்கு பக்கம் ஆதித்ய ஹிருதய பெருமாள், இடபக்கம் ஸ்ரீதேவி, வலப்பக்கம் பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் இடப்பக்கம் நேர்த்திக்கடன் செய்யும் வகையில் அகல் விளக்கு ஏற்ற வசதியாக கட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் முன் பக்கம் பாஸ்கர தீர்த குளம் எப்போதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
பெருமாள் : வலப்பக்கம் ஸ்ரீதேவியுடனும், இடபக்கம் பூதேவியுடன் 9 அடி உயரத்தில் ஆதித்ய பெருமாள் சிரிப்புடன் காட்சித்தருகிறார்.
பீடம் நான்கு அடியில் வட்ட வடிவில், இடது கையில் சங்கு, வலக்கையில் வரம் அருளியும்,
கையில் கட்டைவிரலை மடித்து மோதிர விரல் மீது வைத்துள்ளார்.
தலையில் கிரிடத்துடன், நெற்றிப்பட்டம், தொல் காதும், குண்டலம் அணிந்துள்ளதுடன் இரு கால்களிலும் கண்டிலம் அணிந்துள்ளார்.
கையில் தாமரை மொட்டுடன் சிரித்த முகத்துடன் காட்சித்தருகின்றனர்.
கண் மருத்துவத் துறையில் புகழ் பெறவும், கணக்குப்பாடத்தில் சிறப்படையவும், கம்ப்யூட்டர் துறையில் வளர்ச்சியடையவும், திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும்,
நவகிரக தோஷங்கள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து, முந்திரி, திராட்சை, கற்கண்டு ஆகியவற்றை ஆதித்ய ஹிருதய பெருமாளுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும் நட்சத்திர வடிவில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
கலியுகம் முடிவதை குறிக்கும் சாதனங்கள் பல உள்ளது.
கலியுகத்தின் கடைசி மூன்று நாட்களில் சூரியன் கிழக்கே அல்லாது மேற்கே உதிப்பதாகும்.
என சித்தர்களின் யுக நிதிய கிரகங்களில் விளக்கப்படுகிறது.
கலியுகத்தின் இறுதி நாட்களான அந்த மூன்று தினங்களில் திகழும் மேற்கு திசை சூரிய உதய திசை மாற்றத்தை உதய மாருதி, உதய நாழி, சகோரம், சிம்புள், சரபம், யாளி, தூப்பல் ஆகிய ஏழு முக்கியமான சூரிய லோகத்து தெய்வீகப்பறவைகளே
முதன்முதலில் தீர்க்க தரிசனமாய் அறிந்து மனிதர்களுக்கும் உணர்விக்கும். பட்சி சாஸ்திர வாக்கு மெய்வாக்கியமாய் பொழியும் மூல முதல் தலமாகியது.
பின்னாளில் உதயமார்த்தாண்டபுரம் என மருவியதாக கூறப்படுகிறது.
மிகவும் பழமை வாய்ந்த சூரிய சக்தி வழிபாட்டு தலமாகும்.
அகஸ்திய மாமுனிவர் அரிய சூரிய சக்தி மந்திரங்களை ஓதி வழிபட்டு ஆதித்ய ஹிருதயம் துதியை இயற்றுவதற்கு பிள்ளையார் சுழி இட்ட புண்ணிய பூமி என சித்தர்களால் போற்றப்பட்டதும், ஆதித்ய ஹிருதயம் என்னும் மந்திரத்தை அகத்திய மாமுனிவரால் இலங்கை ராவண யுத்தத்திற்கு
ராமபிரான் செல்வதற்கு முன் இப்பெருமாள் முன்னிலையில் ஸ்ரீராம பெருமானுக்கு உபதேசம் செய்யப்பட்டதும் இந்த மண்ணில்தான் என்று கூறப்படுகிறது
சூரிய பகவானிடம் வேத பாடம் கற்கையில் ஆஞ்சநேயர், சூரியன் உதயமாகும் உதயகிரி மலையில் ஒருபாதத்தை வைத்தும்,
சூரியன் உதயமானதும், அஸ்தகிரி மலையில் மற்றொரு பாதத்தை வைத்தும் சூரிய சக்கரத்தின் படுவேகத்திற்கு இணையாய் ஓடிக்கற்றார்.
இதனால் இங்கு ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்.
கோயில் எதிரில் பாஸ்கர தீர்த்தம் என சிறப்பிக்கப்படும் அழகிய திருக்குளம் எப்போதும் வற்றாமல் உள்ளது.
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக,
இந்த *கலியுகம்* இருக்கிறது.
அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது.
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*
சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.
*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*