என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும்,
பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காகவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெய்வத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன்.
இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.
ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு
சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு.
ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.
பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.
இறைவனின் கட்டளைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில்,
கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே…..
நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும்,
இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின்
அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்….
இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமாக நான் செய்கிறேன்.
இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும்.
ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.
அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும்.
“இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை.
இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல்
இன்று வரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.
இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு.
அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும்.
இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை.
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக,
இந்த *கலியுகம்* இருக்கிறது.
அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது.
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*
சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.
*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*