இது மந்திரங்களில் சிறப்பு வாய்ந்ததாகவும், தாய் மந்திரமாகவும் கருதப்படுகிறது.
இது விஸ்வாமித்திரர் என்ற முனிவரால் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
காயத்ரி மந்திரமானது அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரமாகும்.
*மந்திரம் :*
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
*விளக்கம் :*
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம்.
நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
*காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் :*
பல ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது.
இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது.
இந்த மந்திரம் மிகவும் ரகசியமாக பல வருடங்களாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷகளும்.
அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான சக்திகளே.
இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.
1. தடைகளை நீக்கும் 2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் 3. அறியாமையை போக்கும் 4. எண்ணங்களை தூய்மைப்படுத்தும் 5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும் 6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.
காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும்.
இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது.
காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட்புகும்.
இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும்.
காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள் காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான்
காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும்.
இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும்.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன.
மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
*காயத்ரி மந்திரத்தின் பலன்கள் :*
காயத்ரி மந்திரத்தினை தினசரி உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக,
இந்த *கலியுகம்* இருக்கிறது.
அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது.
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*
சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.
*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*