ஏன் பெண்ணியவாதிகளை திருமணம் செய்வது நல்லது?
அன்பு இருந்து, தனக்கு சரியென்று தோன்றினால் மட்டுமே திருமணம் செய்வார்கள். அம்மா சொன்னார், அப்பா சொன்னார் என்ற கதையெல்லாம் நடக்காது. உறவில் நீங்கள் கோரும் நேர்மையின் அடிப்படையில் பரஸ்பர புரிதலில் உறவு ஆரம்பிக்கும்.
1/ஃ
ஆணை சம்பாதித்து போடும் மெசினாக பார்க்கமாட்டார். குறைவாக சம்பாதிப்பதையோ, எதாவது சூழலால் ஏற்படும் பொருளாதார நட்டங்களைப்பற்றியோ குத்திக்காட்டி, நீ ஒரு கையாலாகாதவன் என்று சொல்லிக்காட்டாமல், துணை நின்று, ஆலோசனைகள் செய்து, வேண்டுமானால் கொஞ்சம் பண உதவி செய்து நல்ல துணையாக இருப்பார்.
2/ஃ
காதலில் தன் எதிர்ப்பார்ப்பு என்ன, காமத்தில் தன் எதிர்பார்ப்பு என்ன என்று பகிர்வாள். கன்னிமைக்கு ஈடு வாழ்நாள் அடிமை என்று துலாபாரம் நடத்தமாட்டாள், செக்ஸ் தருவதால், நான் வரம் தரும் தேவதை என்று சீன் போடாமல், செக்ஸில் நீயும் நானும் பார்ட்னர்ஸ் என்று நேர்மை பாராட்டுவாள். 3/ஃ
10 வயதில் ஒரு பெண் குழந்தையை வெளியே விட முடியாமல் காரணங்கள் இருக்கின்றன.
20 வயதில் ஒரு பெண்ணை வெளியே விட்டாமல் கட்டுப்படுத்த ஒட்டு மொத்த சமூகமும் முன்னணியில் நிற்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகமாம்.
30 வயதில் ஒரு பெண்ணை வீட்டிற்குள் விலங்குகள் போட்டு வைக்க ஆயிரம் காரணங்கள் 1/ஃ
40 வயதில் நம்பிக்கை இல்லாத புருஷன் கூட, வாரிசுகலப்படம் நடக்க வாய்ப்பில்லை/ இனிமேல் இவள எவன் பார்ப்பான்/ , அவளுக்கு கலவியில் நாட்டமில்லை/, புள்ளகுட்டி ஆயிருச்சு, இனிமே குடும்ப கௌரவத்த சிதைக்கிற நடவடிக்கைல இவ இறங்க வாய்ப்பில்லன்னும், 2/ஃ
அடுத்து இருக்குற டீன் மற்றும் 20கள்ல இருக்கிற பெண்கள காக்கிற துணையா இருக்கவேண்டிய பொறுப்பினாலயும், குழந்தைகளின் கல்வி பொருட்டும், 40கள்ல இருக்கிற பெண்களுக்கு சரி போனா போகட்டும் நு
ஒரு ”இயக்க சுதந்திரம்” மட்டும் குடுத்து வச்சிருக்கு இந்த சமூகம்.
அதுல குண்டு போடணுமா? 3/ஃ