பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக,
இந்த *கலியுகம்* இருக்கிறது.
அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அகல் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு.
வீட்டில் நல்லெண்ணெயிலும், *#முருகப்பெருமான்* முன்னிலையில் இலுப்பெண்ணையிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும்.
1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள்.
இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில் விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து வந்து சிவபெருமானை வணங்கினாராம்.
ஒரு அடியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லையே மனம் வருந்தினார்.
ஈசனைப் பார்க்காமல் எப்படி இருப்பது? தூக்கம் வராமல் தவித்தவர் கனவில் சிவபெருமான் தோன்றி ‘என்னை நீ இங்கேயே பார்க்கும் வகையில் ஆலயம் கட்டி வழிபடு’ எனக் கூற அந்த ஆலயத்தை அந்த அடியார் நிறுவினார் .
ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*
திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*