கார்த்திகை தீபங்களை வைக்கும்போது சொல்லும் படி விதிக்கப்பட்டிருக்கும்.
*மந்திரம்:*
கீடா பதங்கா மசகாச்ச வருக்ஷா
ஜலே ஸ்தலேயே நிவஸந்தி ஜீவா:!
தருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
ஸுகின பவந்து சவபசா ஹி விப்ரா:!!
*உரு 21*
மாலையில் விளக்கேற்றும் போதும், கோயில்களில் விளக்கு வழிபாடு செய்யும் போதும் இந்த ஸ்லோகத்தை அவசியம் வாசிக்கவும்.
விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கிய பின், அண்ணாமலையாருக்கு அரோஹரா'' என்று மூன்று முறை சொல்லி திருவண்ணாமலை தீபத்தை மனதார நினைத்து வணங்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் அண்ணாமலை மகாதீபத்தை நேரில் தரிசித்த பலன் உண்டாகும்.
*பழைய விளக்கை சுலபமாக சுத்தம் செய்யும் முறை*:
நிறைய பேர் கார்த்திகை தீபத்திற்கு வருடக் கணக்கில் ஏற்றிய பழைய விளக்குகளை எடுத்து வைத்திருப்பார்கள்.
அது கறி பிடித்து அழுக்காக இருக்கும்.
எரிகின்ற அடுப்பின் நெருப்பில் பழைய அகல் விளக்குகளை எல்லாம் போட்டு எரித்து சூடு தணிந்ததும்,
அதை எடுத்து மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி வெயிலில் காய வைத்தால் அந்த விளக்குகள் எல்லாம் புது விளக்கு போல மாறிவிடும்.
அடுப்பு எல்லோர் வீட்டிலும் இல்லை.
உங்களுடைய வீட்டில் இடம் இருந்தால், விறகில் நெருப்பு மூட்டி இந்த ஐடியாவை முயற்சி செய்து பார்க்கலாம்.
அதற்கும் வழியில்லை என்பவர்கள் ஒரு அகலமான பாத்திரத்தில் சுடுதண்ணீரை ஊற்றி,
பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி,
அதில் பழைய மண் அகல்விளக்குகளை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து,
பிறகு நல்ல தண்ணீரில் கழுவி அதன் பின்பு அதை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளலாம்.
ஈரமாக இருக்கக்கூடிய விளக்குகளை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து முன்கூட்டியே விளக்குகளை தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
புதியதாக விளக்கு கட்டாயமாக கார்த்திகை தீபத்திற்காக நாம் வாங்க வேண்டும்.
அதை சுத்தமான மண் அகல் விளக்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
ஒற்றைப்படையில் வாங்க வேண்டும். 5, 7, 11 என்ற கணக்கில் வாங்கி அந்த விளக்கை சுடுதண்ணீரில் போட்டு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கலாம்.
முடிந்தால் இரவு முழுவதும் அதை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
இப்படி தண்ணீரில் ஊற வைத்த விளக்கை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு அதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து தீபத்தன்று விளக்கு ஏற்றுக் கொள்ளலாம்.
தீபத்திற்கு முந்தைய நாலே மஞ்சள் குங்குமம் பொட்டை வைத்து விளக்குகளை தயார் செய்து வைக்க வேண்டும்
விளக்கில் இருந்து எண்ணெய் கசியாமல் இருக்க:
வாங்கிய புது அகல் விளக்கு பழைய அகல் விளக்கு எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டீர்கள் அல்லவா.
இப்போது இந்த அகல் விளக்குக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும்.
உங்களுடைய வீட்டில் பழைய நெயில் பாலிஷ் இருந்தால் கூட அடிப்பக்கம் உள்பக்கம் மட்டும் அந்த வர்ணத்தை தீட்டிக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் பெயிண்ட் பண்ணுவதற்காக வீட்டில் வைத்திருப்பார்கள் அல்லவா
அந்த கலரை கூட பிரஷில் தொட்டு அகல் விளக்கின் மேல் தீட்டு வெயிலில் காய வைத்து விட்டால், விளக்கிலிருந்து எண்ணெய் கசியாமல் இருக்கும்.
விளக்குக்கு அடியில் அட்டை, ஃபாயில் பேப்பர், என்று வைத்து விளக்கு ஏற்றுவதை விட,
வெற்றிலை, செம்பருத்தி பூ இலை, அரச இலை, இவைகளுக்கு அடியில் மண் அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுவது சிறப்பு. தரையில் எண்ணெயும் வடியாமல் இருக்கும்.
*அகல் விளக்கில் தீபம் காற்றில் அணியாமல் எறிய*:
வெளியில் கோலத்தின் மேல் பால்கனியில் வைக்கக்கூடிய விளக்குகள் பெரும்பாலும்
காற்றில் அணைந்து விடும். இதற்கு என்ன செய்யலாம். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்கூட்டியே உங்கள் வீட்டில் இருக்கும் விளக்கு திரிகளை தடிமனாக திரித்து தயார் செய்து கொள்ளுங்கள்.
பஞ்சித்திரியாக இருக்கட்டும். நூல் திரியாக இருக்கட்டும்.
எதுவாக இருந்தாலும் அந்த திரிகளை இரண்டு திரிகளாக திரித்து தடிமனாக தயார் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த திரியில் முன்கூட்டியே நல்லெண்ணெய் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும்.
எண்ணெயில் திரி இரண்டு நாள் நன்றாக ஊற வேண்டும்.
அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றிவிட்டு இந்த ஊற வைத்திருக்கும் திரிகளை எண்ணெயில் போட்டு,
திரிக்கும் முனையில் கொஞ்சமாக கற்பூரத்தை தூள் செய்து வைத்து விட வேண்டும்.
இப்படி நல்லெண்ணையில் முன்கூட்டியே ஊற வைத்த தடிமனான திரியின் முனையில்
கற்பூரம் வைத்து தீபம் ஏற்றும் போது விளக்கு நின்று எரியும்.
1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள்.
இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில் விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து வந்து சிவபெருமானை வணங்கினாராம்.
ஒரு அடியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லையே மனம் வருந்தினார்.
ஈசனைப் பார்க்காமல் எப்படி இருப்பது? தூக்கம் வராமல் தவித்தவர் கனவில் சிவபெருமான் தோன்றி ‘என்னை நீ இங்கேயே பார்க்கும் வகையில் ஆலயம் கட்டி வழிபடு’ எனக் கூற அந்த ஆலயத்தை அந்த அடியார் நிறுவினார் .
ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*
திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*