M.SivaRajan Profile picture
Dec 6 41 tweets 6 min read
#திருவண்ணாமலை_சிறப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது.

பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம்.

நால்வராலும் பாடப்பட்ட தலம்.
எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

இத்தலத்தில் தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.

கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.

ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.

கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.

இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.

142 சந்நிதிகள்,
22 பிள்ளையார்கள்,
306 மண்டபங்கள்,
1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்),

43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.
கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.

பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.

காலபைரவர் சந்நிதியும் உண்டு.

மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்.

இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது,
தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.
ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும் தான்.
அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்),

வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்);

தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),

தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),

மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),

வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.

இதை காந்த மலை என்பர்.
காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும்,

திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும்,

துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும்,

இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்).

கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.

இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.

26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.
மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.

காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்
அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.

அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால் தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும்,

மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.

திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.
மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.

இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.

இதனால் குழந்தைப்பேறு கிட்டும்;
கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.
இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.

அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.

கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக
விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.

அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.

மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.
தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி,
தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.

தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.
திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

எனவே தான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.
எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,
இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,
வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.
தீபத் திருவிழா!

உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும்.

தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள்.
ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும்.

பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள்.

சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர்.

இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.
பரணி தீபம்!

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.

இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.
அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள்.

இந்த பரணி தீபம் காலையில் நடக்கும்.

மகாதீபம்!

மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில்
ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள்.

அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார்.

இது இரண்டு நிமிட தரிசனம்தான்.

அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள்.
இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக “அண்ணாமலைக்கு அரோஹரா’ எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள் தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள்.
தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள்.

ஆலயத்தார் இவர்களை கௌரவித்த பின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள்.

மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள்.

ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள்.
இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந்துள்ளது.

இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 7
#தீப_தீட்சை

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று.

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம்.

அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். Image
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும்.

எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.
நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பார்ப்போம்.

1.மனக் கவலை தூள் படும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
Read 4 tweets
Dec 7
சென்னை  பாரிமுனை 
கச்சாலீஸ்வரர் ஆலயம்

1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது  இந்த ஆலயம். 

சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள். Image
இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில்  விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து  வந்து  சிவபெருமானை வணங்கினாராம்.

ஒரு அடியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லையே மனம் வருந்தினார்.
ஈசனைப்  பார்க்காமல் எப்படி இருப்பது?  தூக்கம்  வராமல்  தவித்தவர்  கனவில்  சிவபெருமான்   தோன்றி  ‘என்னை    நீ   இங்கேயே  பார்க்கும்  வகையில்  ஆலயம் கட்டி   வழிபடு’  எனக்  கூற  அந்த ஆலயத்தை  அந்த அடியார் நிறுவினார் .
Read 5 tweets
Dec 7
*கார்த்திகையில் - கார்த்திகை 07.12.2022*
*திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரம்!*

ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்! Image
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*

திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
Read 12 tweets
Dec 7
#நரம்பு_தளர்ச்சி_நிவர்த்தி

நரம்பு தளர்ச்சி குணமாகும்
திருவரங்குள ஶ்ரீ சக்கர வழிபாடு :

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்!

குலோத்துங்க சோழீச்சரம் என அழைக்கப்பட்ட இந்தத் தலத்தின் நாயகனாம் சிவனாரின் திருநாமம்... Image
சார்ந்தாரைக் காத்த ஈஸ்வரன்.

தன்னை நாடி வரும் அன்பர்களைக் காத்தருளும் மூர்த்தி இவர்.

ஸ்ரீ சாந்தநாத ஸ்வாமி என அழைக்கின்றனர் பக்தர்கள்!

திரு அரங்குள நாதர் என்கிற திருநாமமும் உண்டு.

சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டவர் ஸ்ரீஅரங்குளநாதர்.
சிறிய மூர்த்தம்தான் என்றாலும் மிகப்பெரிய சாந்நித்தியம் கொண்டவர் சிவனார் என்கின்றனர் அடியார்கள்!

ஏழு தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான இந்தத் தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

சிவ- பார்வதியை தரிசித்து விளக்கேற்றி வணங்கினால், நல்ல வரன் அமையும் என்கின்றனர் பக்தர்கள்.
Read 8 tweets
Dec 7
#தேனீஸ்வரர்

*தேனீஸ்வரர் திருக்கோயில் வெள்ளலூர்*

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்.

தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். Image
வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம்.

இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும்.

ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது.
காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது.
Read 18 tweets
Dec 6
#லிங்கோத்பவர்

*இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா?*

*சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும்*

*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*

*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*

*இவர் தான் லிங்கோத்பவர்.*

*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*

*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,

தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(