தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில்.
வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம்.
இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும்.
ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது.
காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.
இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது.
கரிகாற் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுகன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது.
அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான்.
இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது.
அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க,
கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி,
கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள்.
அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன்
கொங்கு நாட்டிற்குப் புறப்பட்டான்.
கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன்கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர்.
தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர்.
அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது
சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர்.
சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது.
ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.
அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில் வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார்.
கோயிலையும் கட்டி முடித்தனர்.
கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார்.
ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார்.
உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வர முடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.
கோயில் பூஜைகள் திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும் பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார்.
கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று.
கொங்கு நாட்டில் கரிகாற்சோழன் கரூர் முதல் முட்டம் வரை புகழ்பெற்ற 36 சிவன் கோயில்களை உருவாக்கினான்.
அவற்றுள் இதுவும் ஒன்று.
அடுத்ததாக கொடிக்கம்பமும், நந்தி மண்டபமும் உள்ளன.
எட்டுத் தூண்களைக் கொண்ட மகா மண்டபத்தில் தென்பகுதியில் விநாயகர் சன்னிதி உள்ளது.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவர் சுயம்பு தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளி உள்ளார்.
இக்கருவறைக்கு வடக்கு பக்கம் அன்னை சிவகாம சுந்தரி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றார்.
ஒரே கோபுரத்தின் கீழ் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருப்பது அபூர்வம்.
இவ்வாறு சேர்ந்து இருந்தால் மட்டுமே வலம் வரலாம் என்பது ஐதீகம்.
சிவகாம சுந்தரியின் சன்னிதி முன்பாக சங்கர நாராயணன் திருமேனி உள்ளது.
தேவலோக பசுவான காமதேனு வந்து வழி பட்டதால் தேனீசர் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் ஒரு காம்பில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளம் சிவப்பு வர்ணத்தில் உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்தி துதித்தால் ராகு கேது தோஷத்தின் தாக்கம் குறைவதாக நம்புகின்றனர்.
மேலும் இந்த மரப்பொந்தில் இருந்து ஒரு நாகம் வந்து கோமுகம் வழியாக கருவறைக்குச் சென்று
ஈசனை வழிபட்டு திரும்புகின்றன.
இத்தலத்தின் தீர்த்தமாக முன்பு காஞ்சிமா நதி (நொய்யல்) நீர் இருந்தது.
தற்போது நதி வரண்டு மாசுப்பட்டுப் போனதால் ஜலமூலையில் உள்ள சிறிய கிணற்று நீரைத் தீர்த்தமாக பயன்படுத்தப் படுகிறது.
ஸ்தல விருட்சம் வன்னி மரம்.
இங்கு ஆண் பெண் என இருமரங்கள் இருப்பது விசேஷம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது.
மேலும் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணரமுடியும்.
1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள்.
இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில் விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து வந்து சிவபெருமானை வணங்கினாராம்.
ஒரு அடியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லையே மனம் வருந்தினார்.
ஈசனைப் பார்க்காமல் எப்படி இருப்பது? தூக்கம் வராமல் தவித்தவர் கனவில் சிவபெருமான் தோன்றி ‘என்னை நீ இங்கேயே பார்க்கும் வகையில் ஆலயம் கட்டி வழிபடு’ எனக் கூற அந்த ஆலயத்தை அந்த அடியார் நிறுவினார் .
ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*
திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*