ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*
திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
அதனால் அரசன் இவரை சிறையில் அடைக்க, அப்போது தேவப்பெருமாள் திருமங்கை மன்னன் கனவில் தோன்றி, காஞ்சி வேகவதிக் கரையில் செல்வம் இருப்பதாகவும், அதை எடுத்து கப்பத்தொகையை கட்டுமாறும் உரைத்தார்!
அரசனின் படை வீரர்களை தம்முடன் அழைத்து சென்ற பரகாலன், வேகவதிக் கரையில் ஆற்று மணலை அளந்து கொடுத்தார்.
முதலில் கோபித்த வீரர்கள் அளந்து கொடுத்த மண், பொன்னானது கண்டு வியந்தார்கள்!
ஆழ்வார் தான் கண்டு கொண்ட நாராயணா எனும் திருமந்திரத்தின் அற்புத சக்தியை, இவ்வுலகம் உய்ய தனது *பெரியதிருமொழி* பிரபந்தம், முதல் பத்து பாசுரங்களில் "நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்" என்று ஒவ்வொரு பாசுரத்தின் முடிவிலும் உரைக்கிறார்..
"குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்;
நிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்,
அருளொடு பெருநிலம் அளிக்கும்;
வலம்தரும் மற்றும் தந்திடும்* பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
*நாராயணா* என்னும் நாமம்!"
-பெரியதிருமொழி
*குலம் தரும்*
நாராயணா என்னும் திருநாமம் தன்னை ஓதியவர்களுக்கு தொண்டக்குலம் ஆகிய உயர்ந்த குலத்தை தரும்;
*செல்வம் தந்திடும்*
அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும்;
*அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும்*
பாப பலன்களால் அனுபவிக்கும் துன்பங்களை அழிக்கும்;
*நீள்விசும்பருளும்*
முடிவான பரமபதத்தை அருளும்;
*அருளொடு பெருநிலம் அளிக்கும்*
அருளொடு கூடிய கைங்கர்யமாகிய பெருநிலையை தரும்;
*வலம் தரும்*
பரமபதத்தில் ஶ்ரீமந் நாராயணனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் நித்யசூரிகளுக்கு சமமான அறிவையும் ஆற்றலையும் தரும்;
*மற்றும் தந்திடும்*
நமக்கு தெரியாத நமக்கு வேண்டியதனைத்தும் தரும்;
*பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நம்மை பெற்ற தாயைவிட நமக்கு நன்மைகள் செய்யும்;
*நலம் தரும் சொல்லை*
இப்படி எல்லா நன்மைகளையும் தருகின்ற திருநாமத்தை;
*நான் கண்டு கொண்டேன்*
திருமங்கை ஆழ்வாராகிய நான் நேரில்கண்டு கொண்டேன்;
*நாராயணா என்னும் நாமம்*
அது நாராயணா என்னும் திருநாமமே!!!
1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள்.
இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில் விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து வந்து சிவபெருமானை வணங்கினாராம்.
ஒரு அடியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லையே மனம் வருந்தினார்.
ஈசனைப் பார்க்காமல் எப்படி இருப்பது? தூக்கம் வராமல் தவித்தவர் கனவில் சிவபெருமான் தோன்றி ‘என்னை நீ இங்கேயே பார்க்கும் வகையில் ஆலயம் கட்டி வழிபடு’ எனக் கூற அந்த ஆலயத்தை அந்த அடியார் நிறுவினார் .
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*