கார்த்திகை ரோஹிணி - நீளாதேவி அவதரித்த *உறந்தை* என்னும் *உறையூரில்*,
திருமாலின் *"ஶ்ரீவஸ்தம்*" என்னும் "மறுவின்" அம்சமாய் அவதரித்த
*திருப்பாணாழ்வார்* திருநக்ஷத்ரம்!
*பிறப்பால் பாணராக இருந்தாலும், இவரது பண் மற்றும் பக்தி பெருக்கால் இவரை ஆட்கொண்டான் அரங்கன்!*
தன்னுடைய கால் இந்த புனித ஷேத்ரமண்ணில் படக்கூடாது என்பதில் வைராக்யமாக இருந்த பாணர், தினமும் காவிரிக் கரையினில் நின்று கையில் யாழுடன் அரங்கனை சேவித்து மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார்!
ஒருநாள், அரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோகசாரங்கர், வழியை மறைத்து தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த பாணரை விலகும்படி சொல்ல, அது அவர் செவியில் ஏறவில்லை.
கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது பாணரின் நெற்றியில் பட்டு, குருதி வருகிறது. உடன் உணர்வும் வந்து பதறிய பாணர் அங்கிருந்து அகன்றார்!
நீரை முகந்து கொண்டு சந்நிதிக்கு திரும்பிய லோகசாரங்கர்,
அரங்கனின் நெற்றியில் செந்நீர் பெருகி வருவதைக் கண்டு மனம் பதைத்தார்,
ஏதும் செய்யவியலாமல் விதிர் விதிர்த்தார்.
*"பல காலமாக நம்மைப் பாடி வருகிற பாணன் புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ?" என்ற பெருமான், "எம் அன்பனை, இழிகுலத்தோன் என எண்ணாது உம் தோளில் ஏற்றி எம்முன் கொணர்க"* என்றான்!
மனம் வருந்திய லோகசாரங்கர் அரங்கனின் ஆக்ஞையை நிறைவேற்றி,
காவிரிக் கரையிலிருந்து சன்னதி அடைந்த பாணன், *வையமளந்தாணை கண்ணாரப் பருகி அவன் திருமுடி முதல் திருவடி வரை ஒவ்வொரு அவயங்களாக கண்டு, குளிர்ந்து, மனமுருகிப் பாடிய பத்து பாசுரங்களே "அமலனாதிபிரான்" என்ற பிரபந்தம்!*
ஒவ்வோர் அவயமாக கண்டு பாடியபோது பரவஸித்து மகிழ்ந்த அரங்கன், பத்தாம் பாசுரத்தைக் கேட்டு திடுக்கிட்டான்!
"நான் பிறவியெடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை" என்று தீர்மானமாக சொல்ல, தீர்த்தன் திடுக்கிட்டான்!
*இதற்காகவா லோகசாரங்கரை சுமந்து வரச்சொன்னோம்?
*இனி எனக்கு கண்களே தேவையில்லை என்று சொன்னவனை அந்தகனாய் வெளியே அனுப்பவா? அது எனக்குத் தகுமா?
*பக்கத்தில் இருந்து பாணருக்காய் பரிந்துரைத்த பிராட்டிக்கு என்ன பதில் சொல்வது?
*என்று யோசித்த அரங்கன்,
அவனை தன்னருகே அழைத்து "திருப்பாணாழ்வாராக்கி" கொண்டார்!!*
பலருக்கும் தங்கள் கணவன்மார்கள் தங்களை மதிப்பதில்லை,
தங்களிடம் உரிய அன்பைச் செலுத்துவதில்லை என்று நினைப்பதுண்டு.
சொல்லப்போனால் இந்த குறைபாடு தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தோன்றாத தம்பதிகளே இல்லை எனலாம்.
நேத்ராபதி என்றால் தன் மனைவியை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற கணவனையும் குறிப்பதால் இத்தகையோர் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம்.
செம்பியன்களரி திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய படி காட்சி அளிக்கிறாள்.
இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து ஒன்றுக்கொன்று இணையாய் மலர வேண்டியவர்களே என்ற ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாகும்.
காமாக்ஷி என்றால் கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதினாலும் தீண்டாத நேத்ரங்களை உடையவள் என்ற பொருளையும் குறிப்பவளே காமாட்சி அம்மன்.