1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி) 2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி) 3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி) 4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி) 5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி) 7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி) 8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி) 9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி) 10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி) 11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி) 13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்) 14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்) 15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்) 16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்) 17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்) 18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்) 20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர் 21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர் 22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்
இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்...
நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை.
மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கு எது பெரும்பான்மை மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கிறதோ,
அங்கு அந்த மதம் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.
ஐரோப்பாவில் கிறிஸ்தவமும்,
அரேபியாவில் இஸ்லாமும்,
ஆசியாவில் பௌத்தமும்
விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.
எங்கு ஒரு சமூகம்,
அரசையும், மதத்தையும் விமர்சிக்கத் தொடங்குகிறதோ, அச்சமூகம் முன்னேறத் துடிக்கிறது என்று பொருள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தோஷ நிவர்த்தி தலங்கள்
மேஷம் : இராமநாதஸ்வாமி கோயில், இராமேஸ்வரம்
ரிஷபம் : சிவயோகிநாதர் கோயில், திருவிசநல்லூர்
மிதுனம் : முருகன் கோயில், பழனி
கடகம் : கற்கடேஸ்வரர் கோயில், திருந்துதேவன்குடி
சிம்மம் : வாஞ்சிநாதஸ்வாமி கோயில், ஸ்ரீவாஞ்சியம்
கன்னி : வேதகிரிஸ்வரர்கோயில், திருக்கழுக்குன்றம்
துலாம் : சுப்ரமண்யஸ்வாமி கோயில், திருத்தணி
விருச்சிகம் : ஏகாகம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
தனுசு : மயூரநாதஸ்வாமி கோயில், மயிலாடுதுறை
மகரம் : நடராஜர் கோயில், சிதம்பரம்
கும்பம் : திலகேஸ்வரர் கோயில், தேவிபட்டினம்
மீனம் : வைத்தியநாதர் வைத்தீஸ்வரன், கோயில்
இன்னும் நாகதோஷம் போகனும்னா காளஹஸ்தி, கர்ப்பம் கலையாம இருக்கனும்னா திருக்கருகாவூர், பிரம்மஹத்தி தோஷம் போகனும்னா இராமேஸ்வரம்..... இப்டி ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு ஒரு இடத்துலதான் போய் தீர்த்துக்கனும்னா....
கடவுள் இருக்கின்றார் என்கிறீர்கள்.
கடவுளின் இருப்பிற்கு சான்று கேட்டால், காற்று கண்ணுக்குத் தெரியுமா, மின்சாரம் கண்ணுக்குத் தெரியுமா..? ஆனால், அவற்றின் பயன்களை உணர முடிகின்றது அல்லவா..? அது போலத்தான் கடவுளும் என்கிற வறட்டு வாதத்தை முன்வைக்கின்றீர்கள்.
காற்றின் விளைவையும், மின்சாரத்தின் விளைவையும் அவற்றால்தான் விளைகின்றது என்று பல்வேறு சோதனைகளை, பலநிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், எவர் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து பார்த்து உணரலாம்.
அப்படி ஏதேனும் ஒரு முறையில் கடவுளை உணரமுடியுமா..?
உங்கள் கடவுளை அற்ப பொருட்களோடு ஒப்பிட்டு, உங்கள் அரைகுறைப் புரிதல்களை வெளிப்படுத்தி, கடவுளைச் சிறுமைப்படுத்தாதீர்கள்.
உயிர் இருப்பதை எப்படி நம்புகின்றீர்கள் என்றும் கேட்கின்றீர்கள்..? நீங்கள் படித்தவர்கள்தானே..? உயிரின் பண்புகள் தெரியும்தானே..?
சனிப்பெயர்ச்சி என்ற ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு இந்த ஊடகங்களும், பக்தி வியாபாரிகளும் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
சாதாரண காலங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் இந்தச் சனிப் பெயர்ச்சியன்று எகிறி விடுகிறதாம் - இதில் கள்ள டிக்கெட் விற்பனையும் கன ஜோர்..!
இவ்வளவுக்கும் இயற்கையில் நடைபெறும் சுழற்சியை, மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் மூலதன மாக்கிப் பணம் பண்ணுகின்றனர் என்பதுதான் உண்மை.
கடவுள் ஒருவர், அவருக்கு உருவமில்லை; நீக்க மற நிறைந்துள்ளார் என்று மேதாவிலாசமாக அகன்ற மனப்பான்மை உள்ளவர்கள் போல ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு
இன்னொரு பக்கத்தில் இப்படி சனீஸ்வரன் என்றும், சனி தோஷம் என்றும், கொட்டி அளக்கிறார்கள் என்றால் இந்த கழுதைக் கூத்தை என்னவென்று சொல்லுவது!
யார் இந்த சனியாம்? அதற்கும் ஒரு புராணக் கதையை எழுதி வைத்துள்ளனர்.
சூரியனுக்கு மனைவி உண்டாம்; அவள் பெயர் ஷஞ்சையாம். சூரியன் காம விகாரனாம்.
பகுத்தறிவென்பது உருவமில்லாத கடவுள் கைகளை நீட்டி "உண்டாகட்டும்" என்று சொன்னதும் பிரபஞ்சம் உண்டானது என்றும், கடவுளுக்கு உருவம் இல்லையே எப்படி கைகள் இருக்கும் என்று கேட்டால் அவனுக்குள் எல்லாம் அடக்கம் என்றும்,
உருவமும் அருவமும் அவனே என்று மொக்கையாகக் காமெடி செய்வதும் உங்களின் பகுத்தறிவு.
களிமண்ணைப் பிசைந்து உயிரினங்களை உருவாக்குவதும், நட்சத்திரங்கள் அந்தரத்தில் தொங்குபவை என்றும், அது எப்பொழுது வேண்டுமானாலும் நம் மீது விழலாம் என்பதும்,
கடவுள் ஏன் உயிரினங்களைப் படைத்தான் என்று கேட்டால் சொர்கத்தில் வாழ்வதற்கான தகுதி உடைய மனிதனை இங்கு சோதித்தறிய பூமியில் அனுப்பியிருக்கிறான் என்று சொல்வதும் உங்கள் பகுத்தறிவு.
சரி galaxy யில் பூமி கிரகம் இருப்பது தெளிவாகத்தெரியும்,