தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️
2 subscribers
Mar 6 • 5 tweets • 1 min read
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கடவுள் இல்லைன்னு புடுங்கி மாதிரி பேசுறீங்களே. உங்க கழுத்துல கத்தி வெச்சு கடவுள் இருக்குன்னு சொல்ல சொன்னா என்ன சொல்லுவீங்க என்று கேட்டார்...
கடவுள் இருக்குன்னு சொல்லுவோம் என்றேன்.
உடனே பெரிதாக சிரித்துவிட்டு அம்புட்டுதான் உங்கள் கொள்கை,
சித்தாந்தம், பகுத்தறிவு மயிறு மட்டை எல்லாம் என்றார்.
நான் அவரிடம் உங்களை போன்று நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம் இருந்தாலும் ஒரு பேச்சுக்கு நாங்களும் கழுத்தில் கத்தி வைத்து கடவுள் இல்லைன்னு சொல்ல சொன்னால் என்ன சொல்லுவீங்கன்னு கேட்டேன்...
Jan 12 • 8 tweets • 1 min read
பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 450 கோடி ஆண்டுகளை 24 மணி நேரத்திற்குள் அடக்கினால் மனிதர்கள் எடுத்துக்கொண்ட கால அளவு எவ்வளவு?
12.00 AM to 10.24 PM - பூமி தன்னைத் தானே சீர்படுத்திக்கொண்டு உயிரினங்கள் வாழக்ககூடிய கிரகமாக மாறுகிறது.
முதல் உயிரி தோன்றி அது பல பரிணாமங்களுக்கு உட்பட்டு வெவ்வேறு உயிரினங்கள் தோன்றி மறைகிறது. இதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு 22 மணி நேரம், 24 நிமிடங்கள்.
Dec 30, 2023 • 5 tweets • 1 min read
விஜயகாந்த் உழைச்சு வாங்கின இடத்துலதான் அவரை அடக்கம் பண்ணீருக்காங்க… பொறம்போக்கு இடத்துக்காக போராட்டம் பண்ணலை’னு தலைவர் கலைஞர் மரண நிகழ்வுகளை மையப்படுத்தி அதிமுக அடிமைகளும், சங்கிகளும், மினி சங்கிகளான தம்பிகளும் உருட்டிட்டு இருக்கானுக…
இந்தக் குருட்டு முண்டங்களுக்கான விளக்கம் இதோ… 👇
♦ அண்ணா சதுக்கம்
♦ கலைஞர் ஓய்வகம்
♦ எம்ஜிஆர் சமாதி
இம்மூன்றும் இருப்பது கூவம் ஆற்றையும் மெரினாவையும் ஒட்டியுள்ள இடுகாடு பகுதிக்குள். இடுகாடு என்றால் புதைக்கும் இடம் என்றும், சுடுகாடு என்றால் எரிக்கும் இடம் என்றும் அர்த்தம்.
Oct 20, 2023 • 5 tweets • 3 min read
Loki's Retro Playlist ✨
In Leo ~
1. Karu karu karupayi (Eazhaiyin Sirippil) 2. Thaamara Poovukkum Thannikkum (Pasumpon)
In Vikram ~
புராணங்கள்,இதிகாசங்கள்,தர்ம சாஸ்திர நூல்கள் சூத்திரன் முதல் மூன்று வர்ணத்தவருக்கு அடிமை சேவகம் செய்வதே
Jul 22, 2023 • 27 tweets • 4 min read
தகாத உடலுறவு, மாடு, குதிரைய செக்ஸ் பண்றது, ரேப் பண்றது, சின்னப் பிள்ளைகள பலாத்காரம் பண்றது - இதை தவிர இந்துமதத்துல என்ன கலைய வளர்க்க போறாங்க ? இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?
1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு) குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை
Jul 15, 2023 • 6 tweets • 1 min read
வாஸ்து பகவான் தோன்றிய புராணக் கதை..!
எவ்வளவு ஐயோக்கியத்தனமான கதை? பூதம் எப்படிடா பகவான் ஆனது?"
அது அறிவியல் என்று சொல்லி ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறார்கள்.
முன்பொரு காலத்தில் அண்டகாசூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் மமதை கொண்டு சிவபெருமானையே
போருக்கு அழைத்தான்.
சிவபெருமான் அவனுடன் ஆக்ரோஷமாகப் போரிட்டார். அப்போது அவர் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதம் ஒன்று தோன்றியது. கரிய நிறத்தில இருந்த அந்த பூதத்திற்கு அகோர பசியெடுத்தது.
கண்ணில் கண்டவர்களையெல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தது.
May 4, 2023 • 15 tweets • 2 min read
கேள்வி:- நம் முன்னோர்கள் சாதியின் காரணமாக அனுபவித்த கொடுமைகள் என்னென்ன?
பதில்: மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.
ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பார்ப்பனனரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்துத் தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும். இதே போன்று
May 3, 2023 • 5 tweets • 1 min read
சார்...திருப்பதி தேவஸ்தானமா...?
ஹெ...செப்பண்டி...ஏம் காவலாண்டி மீகு...?
இப்படி அடிச்சுவிட்டா எனக்கு புரியாது.. தமிழ்ல சொல்லுங்க சார்..
ஆமாம்... சொல்லுங்கோ..
ஒங்களுக்கு என்ன வேண்டும்..?
ஒன்னும் வேணாம்.. இந்த லட்டு செய்யிறாங்களே...
அவங்க என்ன ஆளுங்க சார்..?
அவங்கலாம் அய்யங்காருங்க..
சுத்தபத்தமா இருப்பா கவலபடாதண்டி.
ஏன் வேற யாரும் லட்டு செய்யக்கூடாதா..?
கோயிலில் மடப்பள்ளியில் உள்ளே போறதுக்கு அய்யங்கர் ஜாதியினருக்கு மட்டும்தான் உரிமை. வேறு ஜாதிக்காரவா யாரும் உள்ளே போகப்படாது. லட்டு புடிக்குற உரிமையும் அவங்களுக்கு மட்டும்தான் சார்..
Apr 19, 2023 • 13 tweets • 2 min read
பெரும்பாலும் மத அடிப்படைவாதத்துக்கு ஆதரவா பேசுற ஆட்கள்கிட்ட பேசி ஒரு பயனும் இருக்காது அது தேவையில்லாத நேர விரையம் தான், இருந்தாலும் இந்துத்துவா கொள்கைய தூக்கி சுமக்கிற ஒரு சில சங்கிய நிறுத்தி "உடன்கட்டை" "வெள்ளை சீலை" பத்தியெல்லாம் கேட்டா சில சமயம் சங்கிகள் கூட
"அதெல்லாம் அந்த காலம் சார்-னு" சொல்ல வாய்ப்பிருக்கு ஆனா இந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்த ஆதரிச்சு பேசறவங்கிட்ட நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு ஆதாரமே இல்லாத ஒரு வாதத்த வெச்சிட்டு நிரூபிக்க முடியலைனா இஸ்லாத்தையும், குர்ஆனையும் முழுமையா படிங்கனு சொல்லி நம்ம தலைய தட்டிவிட்டுனு ஓடுறத தான்
Apr 13, 2023 • 9 tweets • 2 min read
அந்த வாட்ச்சும் லஞ்சம்தானா... காசு கொடுத்து வாங்கலையா அண்ணாமலை?
மோசடி பேர்வழியிடமிருந்து லஞ்சமாக பெற்ற ரபேல் கெடிகாரத்தை கையில் கட்டிக் கொண்டு தான் இவ்வளவு அலப்பறை செய்து கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஏதோ ரத்த வியர்வை சிந்தி தானே சம்பாதித்து வாங்கியது போல ஒரு
பில்டப் கொடுத்தாரே...அப்பப்பா அவார்டே கொடுக்கணும்டா சாமி.
இன்றைக்கு ரபேல் ரசீது வெளியே வந்து அண்ணாமலையை பார்த்து சிரிக்கிறது. சரி... எப்படித்தான் அண்ணாமலைக்கு இந்த விலையுயர்ந்த ரபேல் கெடிகாரம் கிடைத்தது?
கர்நாடக அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் பொறுப்பாளர் தேஜஸ்வி சூரியாவுக்கும்
Apr 5, 2023 • 22 tweets • 3 min read
விடுதலை என் பார்வை:
என்னுடைய முதல் பதிவாக இதை ஆரம்பிக்கிறேன். என்னுடைய சிந்தனை ஓட்டத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள உதவியாக இந்த பதிவை செய்கிறேன். என்னுடைய ஆச்சர்யமான ஒரு மனிதராக திரு. வெற்றி மாறன் அவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு வெற்றி, புகழ் வந்த பின்னும் எப்படி அவரால் ஒரு
சாதாரண மனிதராக இருக்க முடிகிறது என்று எனக்கு விளங்க வில்லை. மேலும் அவருடைய படைப்பில் அவர் தேர்ந்து எடுத்த காலம் அவர் அதற்கு செய்யும் உழைப்பு படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகிறது. கண்டிப்பாக இவர் பணத்திற்காகவோ புகழுக்காகவோ வந்த மனிதர் இல்லை என்பது மட்டும் நன்கு புலப்படுகிறது.
Mar 13, 2023 • 7 tweets • 1 min read
சோழர்கள் ஒருமுறை பாண்டியர்களோடு போர்க்களத்தில் சண்டையிட்ட போது.. கொஞ்சம் கொஞ்சமாய் பாண்டிய நாட்டு எல்லையை தகர்த்து நாட்டுக்குள் நுழைந்தனர்.. சோழர் படை ஏறத்தாழ ஆறு நாட்கள் சண்டையிட்ட சோர்வும் பசியும் அவர்களை பாண்டிய நாட்டுத் தெருக்களை சூரையாடத் தூண்டியது..
ஆனால், பாண்டியர்களோ உஷாராகி, உணவு, தண்ணீர் என்று எதுவும் கிடைக்காமல் இறக்கட்டும் என்று எல்லாவற்றையும் காலி செய்து பாண்டிய நாட்டுத் தெருக்களில் ஒரு குவளை தண்ணீருக்காக சோழர் படைகளை அலையவிட்டனர்.. நிறைய வீரர்கள் சுருண்டு விழவும் ஆரம்பித்தனர்..
Dec 31, 2022 • 13 tweets • 2 min read
கடவுள் நம்பிக்கை ஆறுதல்படுத்துகிறதா..?
ஒருவர் தன் வண்டி சாவியை தொலைத்து விடுகிறார் உடனே ச்ச கடவுளே இது என்ன தலைவலி என்கிறார்
இன்னொருவர் தன் சேமிப்பு பணத்தை ஒரு சீட்டு கம்பெனியிடம் ஏமாந்து விடுகிறார். இந்த ஏமாற்றத்தை பொருத்து கொள்ள முடியாத அவர் கடவுளே இது நியாயமா..?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, நீதான் அந்த ஏமாற்றுகாரர்களை தண்டிக்க வேண்டும் என்கிறார்
இதுபோன்ற சூழ்நிலைகளில் அதாவது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற சூழ்நிலையில் ஒரு மனிதர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுளிடம் உதவி கேட்டோ அல்லது திட்டியோ ஆறுதல் தேடி கொள்கிறார்
Dec 19, 2022 • 7 tweets • 1 min read
தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!
அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும் அந்த அனுபவமும் கூட இருக்கும்..!
அது ஏன்..?
உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!
மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.
ஒன்று விரைவான கண் அயர் இயக்கம்
(RAPID EYE MOVEMENT)
மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM).
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.
அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.
Dec 12, 2022 • 10 tweets • 2 min read
மதம் அறிவியலிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வு!
இத்தாலி நாட்டின் பைசா நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் #Galelio_Galilei (15-02-1564) பிறந்தார்
மதம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும்.
காரணம் ஆதாரமற்ற நம்பிக்கையை விட ஆதாரத்தின் அடிப்படையிலான விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது. அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள் கலிலீயோ மிக முக்கியமானவர்.
நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசை கலைஞரின் மகனாகப் பிறந்தார்.
Dec 10, 2022 • 5 tweets • 1 min read
தோஷ நிவர்த்தி தலங்கள்
மேஷம் : இராமநாதஸ்வாமி கோயில், இராமேஸ்வரம்
ரிஷபம் : சிவயோகிநாதர் கோயில், திருவிசநல்லூர்
மிதுனம் : முருகன் கோயில், பழனி
கடகம் : கற்கடேஸ்வரர் கோயில், திருந்துதேவன்குடி
சிம்மம் : வாஞ்சிநாதஸ்வாமி கோயில், ஸ்ரீவாஞ்சியம்
கன்னி : வேதகிரிஸ்வரர்கோயில், திருக்கழுக்குன்றம்
துலாம் : சுப்ரமண்யஸ்வாமி கோயில், திருத்தணி
விருச்சிகம் : ஏகாகம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
தனுசு : மயூரநாதஸ்வாமி கோயில், மயிலாடுதுறை
மகரம் : நடராஜர் கோயில், சிதம்பரம்
கும்பம் : திலகேஸ்வரர் கோயில், தேவிபட்டினம்
1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி) 2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி) 3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி) 4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி) 5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி) 7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி) 8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி) 9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி) 10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி) 11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
Nov 29, 2022 • 6 tweets • 1 min read
கடவுள் இருக்கின்றார் என்கிறீர்கள்.
கடவுளின் இருப்பிற்கு சான்று கேட்டால், காற்று கண்ணுக்குத் தெரியுமா, மின்சாரம் கண்ணுக்குத் தெரியுமா..? ஆனால், அவற்றின் பயன்களை உணர முடிகின்றது அல்லவா..? அது போலத்தான் கடவுளும் என்கிற வறட்டு வாதத்தை முன்வைக்கின்றீர்கள்.
காற்றின் விளைவையும், மின்சாரத்தின் விளைவையும் அவற்றால்தான் விளைகின்றது என்று பல்வேறு சோதனைகளை, பலநிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், எவர் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து பார்த்து உணரலாம்.
அப்படி ஏதேனும் ஒரு முறையில் கடவுளை உணரமுடியுமா..?
Nov 28, 2022 • 18 tweets • 3 min read
சனிப்பெயர்ச்சி என்ற ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு இந்த ஊடகங்களும், பக்தி வியாபாரிகளும் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
சாதாரண காலங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் இந்தச் சனிப் பெயர்ச்சியன்று எகிறி விடுகிறதாம் - இதில் கள்ள டிக்கெட் விற்பனையும் கன ஜோர்..!
இவ்வளவுக்கும் இயற்கையில் நடைபெறும் சுழற்சியை, மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் மூலதன மாக்கிப் பணம் பண்ணுகின்றனர் என்பதுதான் உண்மை.
கடவுள் ஒருவர், அவருக்கு உருவமில்லை; நீக்க மற நிறைந்துள்ளார் என்று மேதாவிலாசமாக அகன்ற மனப்பான்மை உள்ளவர்கள் போல ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு
Nov 28, 2022 • 7 tweets • 1 min read
“பகுத்தறிவு மார்க்கம்”
பகுத்தறிவென்பது உருவமில்லாத கடவுள் கைகளை நீட்டி "உண்டாகட்டும்" என்று சொன்னதும் பிரபஞ்சம் உண்டானது என்றும், கடவுளுக்கு உருவம் இல்லையே எப்படி கைகள் இருக்கும் என்று கேட்டால் அவனுக்குள் எல்லாம் அடக்கம் என்றும்,
உருவமும் அருவமும் அவனே என்று மொக்கையாகக் காமெடி செய்வதும் உங்களின் பகுத்தறிவு.
களிமண்ணைப் பிசைந்து உயிரினங்களை உருவாக்குவதும், நட்சத்திரங்கள் அந்தரத்தில் தொங்குபவை என்றும், அது எப்பொழுது வேண்டுமானாலும் நம் மீது விழலாம் என்பதும்,