முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம்.
தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.
முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான்.
இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)
சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம்.
கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.
சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.
கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன.
இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன.
ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.
மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும்.
நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும்.
நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.
விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள்.
எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம்.
ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.
மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை
நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம்.
நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
எம்.எஸ்.அம்மாவுக்கு 'யுனைடட் நேஷன்ஸ்'ல் பாட வாய்ப்பு வந்தது. அவர் பெரியவாளிடம் வந்து தெரிவித்து ஆசி வேண்டி நின்றார்.
அவரும்," இது உனக்கு மட்டும் கிடைத்த கௌரவம் இல்லை; இந்திய மண்ணுக்கே கிடைத்த பெருமை. தெய்வீக இசைக்குக் கிடைத்த பெருமை. வெற்றிக் கொடி நாட்டி வா!" என்று ஆசி கூறி அனுப்பினார்.
அப்போதுதான் அது சர்வதேச அரங்கமாக இருப்பதால் அங்கு பாட 'மைத்ரீம் பஜத' என்ற பாட்டை பெரியவா எழுதிக் கொடுத்தார். அது பெரியவா உபதேசப் பாடல். பிரபல இசை மேதை வஸந்த் தேசாய் என்பவர் மெட்ட மைத்துக் கொடுத்தார்.
தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன.
தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.
ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது.
சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி.
ஸ்ரீ பவளவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ பவளவண்ணப் பெருமாள் திருக்கோவில், திருப்பவளவண்ணம் திவ்யதேசம், காஞ்சிபுரம்.
1
திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ளது.
2
வரலாறு
காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள்.
ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது,
மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலின் தெப்பக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுக்குக்கொருமுறை கடலின் ஆழ்கடலில் காணும் சங்கு உற்பத்தியாகி வெளி வருகிறது.
இவற்றை சிவாச்சாரியார்கள் சேகரித்து மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர். இங்குள்ள மலையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போது கழுகு வட்டமிடும்
2 கர்னாடகா சிவகங்கை
தமிழநாட்டின் சிவகங்கையைப் போல் கர்னாடகாவிலும் ஒரு சிவகங்கை உண்டு. பங்களூரிலிருந்து 50 கிமீட்டர் தொலைவில் உள்ளது. இது குன்றோடு கூடிய ரம்மியமான இடம். இக்குன்றில் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்குன்றில் மகர சங்கராந்தியின் போது ஒரு அதிசயம் நடக்கும்.
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே ‘பொறுமை’
எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’ எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க முடியும்.
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பைக் கண்டு பிடித்தார்.
ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது.
அப்போது எடிசன் எப்படி நொந்து போய் இருப்பார்...?
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சம்பவம்...