இன்று நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் :
மதுரை அருகே உள்ள அழகர்மலைமீது நூபுரகங்கை உற்பத்தியாகும் இடத்திற்குப் பக்கத்தில் கோயில்கொண்டு அருள்பாலித்து வருகிறாள் ராக்காயி அம்மன்.
நூபுர கங்கை ஊற்றாக உற்பவித்து ஆறாக ஓடுகிறது! இது பிற எல்லா தீர்த்தங்களுக்கும் தாயாக விளங்குகிறது,
கொடிய பாவங்களைப் போக்கவல்லது, திருமாலின் திருவடிக்குப் பணி செய்யும் திருமகளைப் போன்று சிறப்புமிக்கது என்றெல்லாம் போற்றப்படுகிறது.
பிரம்ம தேவன், திரிவிக்ரமாவதார மூர்த்தியின் சிலம்பணிந்த கமலப் பாதங்களை தன் இரு கரங்களாலும் அபிஷேகிக்க,
அந்தத் திருவடித் தாமரையில் பட்ட புனித நீர் இந்த மலையில் வீழ்ந்து நூபுர கங்கை என்னும் பெயர் பெற்றது என்றும்,
இந்த தீர்த்தத்தில் நீராடுவது, கங்கையில் நீராடுவதைக் காட்டிலும் உயர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.
இறைவன் பொற்பாதச் சிலம்பிலிருந்து தெறித்துப் பெருகியதால் இந்த ஆறு சிலம்பாறு என்றும் கூறப்படுகிறது.
இந்த நதியைக் கண்ணால் பார்த்தாலேயே பாவங்கள் போகும் என்று நம்பப்படுகிறது.
அப்படி இருக்க இந்தத் தீர்த்தத்தைத் தொடுவதாலும், நீரைப் பருகுவதாலும், அதில் நீராடுவதாலும், தோஷங்கள் நீங்கி, நோய்கள் மறைந்து, செல்வ வளம் மிக்கவர்களாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த தெய்வீக நதிக் கரையில் செய்யப்படும் தானங்கள், வேள்விகள், ஜெபங்கள் எல்லாம்
மானிடர்களுக்கு ஆயிரம் மடங்கு புண்ணியமாகப் பெருகி விடுகிறது என்றும் இந்த நூபுர கங்கா நதியின் அலைகளிலிருந்து வீசும் காற்று, எங்கெல்லாம் பரவுகிறதோ, அங்கே வசிப்பவர்களுக்கெல்லாம் முக்தி கிடைக்கிறது என்பது ஐதீகம்.
நூபுர கங்கை மாதவி மண்டபம் என்னும் இடத்தில் இருந்து உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.
இந்த நூபுர கங்கை பாயும் இடத்தில்தான் ராக்காயி அம்மன் கோயில் இருக்கிறது.
இந்தக் கோயில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ளது.
சுற்றிலும் அடர்ந்த காடுகள் கொண்ட மலைப் பிரதேசம். இந்தக் காடுகளில் ஏராளமான மூலிகைச் செடிகள், கொடிகள், மரங்கள் இருக்கின்றன.
இந்த மூலிகைக் காடுகளின் வழியாக சிலம்பாறு பாய்ந்து வருவதால் அந்த நீருக்கு இயற்கையாகவே ஏராளமான மருத்துவ சக்தி இருக்கிறது.
அதோடு புனிதத் தன்மையும் சேரும்போது அந்த ஆற்றில் ஒரு முறை நீராடி எழுந்தாலே, அந்த நீரைப் பருகினாலே வயிறு சம்பந்தப்பட்ட மற்றும் பிற நோய்களும் மறைந்து போகின்றன, பல நாட்கள் தொடர்ந்து நீராடினால் மனநோய்களும் மறைகின்றன என்கிறார்கள்.
பழமுதிர்ச்சோலையில் இருந்து சற்று மேடாகப் போகும் வழியில் சிறிது தூரம் நடந்து, ஏராளமான படிகளைக் கடந்து ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம். வழியில் ஏராளமான குரங்குகள்.
படிகளுக்கு மேலே, உச்சியில் பெரிய மண்டபம் காணப்படுகிறது.
இங்கே தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு உடன் வந்த யாராவது ஒருவரை அவற்றைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, குளிப்பதற்கு என்று தனியாக உள்ள பகுதியில் கிணறு போன்ற அமைப்பிலிருந்து பக்கெட்டில் நீர் முகந்து தலையில் ஊற்றிக் குளிக்கிறார்கள்.
கோயிலுக்கு வருபவர்கள் எல்லாரும் நீராடி விட்டு ஈர உடையுடன் ராக்காயி அம்மனை தரிசிக்க மிகவும் குறுகிய பாதையில் வரிசையில் வருகிறார்கள்.
நின்ற கோலத்தில் வெள்ளித் திருமுகம் அணிந்து ராக்காயி அம்மன் அருள்புரிகிறார்.
ரோஜாப்பூ மாலைகள் மற்றும் மதுரையின் சிறப்பு அம்சமான குண்டு மல்லிகைப் பூச்சரங்களை அணிந்து வீற்றிருக்கிறாள்.
சிறிய கோயில் சந்நதிக்கு விமானம் இல்லை.
அம்மனிடம் தம் குறைகளைச் சொல்லி பக்தர்கள் வேண்டிக் கொண்டு, நம்பிக்கையுடன் சந்நதியை விட்டு
நகருகின்றனர்.
வீட்டிற்குச் செல்லும்போது மறக்காமல் நூபுர கங்கையின் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு போய், வீட்டில் தெளிப்பதாகவும், வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தருவதாகவும் சொல்கிறார்கள்.
நூபுர கங்கையில் நீராடி ராக்காயி அம்மனைத் தொழுதுச் சென்றால் மருத்துவர்களுக்கும் என்னவென்றே புரியாத பல உடல் கோளாறுகள் தீர்கின்றன என்பது பலரது அனுபவ நம்பிக்கையாக இருக்கிறது!
சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூஜை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூஜை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
*சிவ சஹஸ்ர நாமாவளியை ப்ரம்ம புத்திரர்களில் ஒருவரான தண்டி என்பவர் உரைநடைப்படுத்தி தலைமுறை தலைமுறையாக வாய் வழியாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உபமன்யு முனிவர் உபதேசித்தருளினார்.*
*இந்த மஹிமை வாய்ந்த சிவ சஹஸ்ர நாமத்தின் மஹிமை அளவிடற்கரியது.*
*மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு அற்புத மகிமை வாய்ந்த சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை உபதேசிக்கிறார்.
இதை ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு முனிவரிடமிருந்து முன்பு கற்றுக்கொண்டார்.*
*இது முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்தில் சொல்லப்பட்டது.
பிரம்மாவின் குமாரனான தண்டி இதைச் சொர்க்கத்தினின்று பெற்றார்.
எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.*
*தண்டி இதை சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார்.
விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம்.
இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக் கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.
உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது.