மதம் அறிவியலிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வு!
இத்தாலி நாட்டின் பைசா நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் #Galelio_Galilei (15-02-1564) பிறந்தார்
மதம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும்.
காரணம் ஆதாரமற்ற நம்பிக்கையை விட ஆதாரத்தின் அடிப்படையிலான விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது. அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள் கலிலீயோ மிக முக்கியமானவர்.
நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசை கலைஞரின் மகனாகப் பிறந்தார்.
பைசா நகரில் பள்ளி படிப்பை முடித்தார். கணிதத்துறை பேராசிரியராக பைசா பல்கலைகழகத்திலும் படூவா பல்கலைகழகத்திலும் பணிபுரிந்தார். ஏற்க்கெனவே இருந்து வந்த தொலை நோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார்.
உலகம் தட்டை என்றும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன என்றும் பைபிள் சொல்ல, அதை கிருஸ்தவம் நம்பிக்கொண்டிருந்த கால கட்டத்தில்... சில துணைக்கோள்கள் வியாழன் கிரகத்தை சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.
மத உலகைப் பொருத்தவரை இது ஒரு அதிர்ச்சியான தகவலாக இருந்தது. கடவுளின் வார்த்தையான "பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன" என்பதை முறியடிப்பதென்றால் சும்மாவா..?
உண்மையில், இந்த மூட நம்பிக்கைக்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ்.
சூரியனை மய்யப்படுத்திய, "பூமி உட்பட சூரிய குடும்ப கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றூகின்றன" என்ற அவரின் கண்டுப்பிடிப்பை வழிமொழிந்தவர் புருனோ.
மதவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மதம் யானைக்கு மட்டுமல்ல, மனிதனுக்கு பிடித்தாலும் ஆபத்தாயிற்றே..!
கொலைக்காரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றார்கள். புரூனோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.அதே கருத்துகளைத்தான் கலிலீயோ வும் ஆதாரத்தோடு கூறி உறுதிப்படுத்தினார். மதம் மருண்டது என்றாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
விண்ணைப் பார்த்து ஆய்ந்து ஆய்ந்து அந்த இரு விழிகள் படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில் முற்றிலும் பார்வையற்றவரானார். 1642 சனவரி 8ல் மரணம் அடைந்தார். கலிலீயோ மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து 1737ம் ஆண்டு
அவரது உடல் கல்லைறையிலிருந்து எடுக்கப்பட்டு சாண்டாகிளாஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர் திங்களில்...
ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் கணித வல்லுநர் வானியல் விஞ்ஞானி கலிலீயோ கண்டுப்பிடித்துச் சொன்ன கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது. கலிலீயோ வுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது கத்தோலிக்க மத பீடம்..!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தோஷ நிவர்த்தி தலங்கள்
மேஷம் : இராமநாதஸ்வாமி கோயில், இராமேஸ்வரம்
ரிஷபம் : சிவயோகிநாதர் கோயில், திருவிசநல்லூர்
மிதுனம் : முருகன் கோயில், பழனி
கடகம் : கற்கடேஸ்வரர் கோயில், திருந்துதேவன்குடி
சிம்மம் : வாஞ்சிநாதஸ்வாமி கோயில், ஸ்ரீவாஞ்சியம்
கன்னி : வேதகிரிஸ்வரர்கோயில், திருக்கழுக்குன்றம்
துலாம் : சுப்ரமண்யஸ்வாமி கோயில், திருத்தணி
விருச்சிகம் : ஏகாகம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
தனுசு : மயூரநாதஸ்வாமி கோயில், மயிலாடுதுறை
மகரம் : நடராஜர் கோயில், சிதம்பரம்
கும்பம் : திலகேஸ்வரர் கோயில், தேவிபட்டினம்
மீனம் : வைத்தியநாதர் வைத்தீஸ்வரன், கோயில்
இன்னும் நாகதோஷம் போகனும்னா காளஹஸ்தி, கர்ப்பம் கலையாம இருக்கனும்னா திருக்கருகாவூர், பிரம்மஹத்தி தோஷம் போகனும்னா இராமேஸ்வரம்..... இப்டி ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு ஒரு இடத்துலதான் போய் தீர்த்துக்கனும்னா....
கடவுள் இருக்கின்றார் என்கிறீர்கள்.
கடவுளின் இருப்பிற்கு சான்று கேட்டால், காற்று கண்ணுக்குத் தெரியுமா, மின்சாரம் கண்ணுக்குத் தெரியுமா..? ஆனால், அவற்றின் பயன்களை உணர முடிகின்றது அல்லவா..? அது போலத்தான் கடவுளும் என்கிற வறட்டு வாதத்தை முன்வைக்கின்றீர்கள்.
காற்றின் விளைவையும், மின்சாரத்தின் விளைவையும் அவற்றால்தான் விளைகின்றது என்று பல்வேறு சோதனைகளை, பலநிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், எவர் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து பார்த்து உணரலாம்.
அப்படி ஏதேனும் ஒரு முறையில் கடவுளை உணரமுடியுமா..?
உங்கள் கடவுளை அற்ப பொருட்களோடு ஒப்பிட்டு, உங்கள் அரைகுறைப் புரிதல்களை வெளிப்படுத்தி, கடவுளைச் சிறுமைப்படுத்தாதீர்கள்.
உயிர் இருப்பதை எப்படி நம்புகின்றீர்கள் என்றும் கேட்கின்றீர்கள்..? நீங்கள் படித்தவர்கள்தானே..? உயிரின் பண்புகள் தெரியும்தானே..?
சனிப்பெயர்ச்சி என்ற ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு இந்த ஊடகங்களும், பக்தி வியாபாரிகளும் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
சாதாரண காலங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் இந்தச் சனிப் பெயர்ச்சியன்று எகிறி விடுகிறதாம் - இதில் கள்ள டிக்கெட் விற்பனையும் கன ஜோர்..!
இவ்வளவுக்கும் இயற்கையில் நடைபெறும் சுழற்சியை, மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் மூலதன மாக்கிப் பணம் பண்ணுகின்றனர் என்பதுதான் உண்மை.
கடவுள் ஒருவர், அவருக்கு உருவமில்லை; நீக்க மற நிறைந்துள்ளார் என்று மேதாவிலாசமாக அகன்ற மனப்பான்மை உள்ளவர்கள் போல ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு
இன்னொரு பக்கத்தில் இப்படி சனீஸ்வரன் என்றும், சனி தோஷம் என்றும், கொட்டி அளக்கிறார்கள் என்றால் இந்த கழுதைக் கூத்தை என்னவென்று சொல்லுவது!
யார் இந்த சனியாம்? அதற்கும் ஒரு புராணக் கதையை எழுதி வைத்துள்ளனர்.
சூரியனுக்கு மனைவி உண்டாம்; அவள் பெயர் ஷஞ்சையாம். சூரியன் காம விகாரனாம்.
பகுத்தறிவென்பது உருவமில்லாத கடவுள் கைகளை நீட்டி "உண்டாகட்டும்" என்று சொன்னதும் பிரபஞ்சம் உண்டானது என்றும், கடவுளுக்கு உருவம் இல்லையே எப்படி கைகள் இருக்கும் என்று கேட்டால் அவனுக்குள் எல்லாம் அடக்கம் என்றும்,
உருவமும் அருவமும் அவனே என்று மொக்கையாகக் காமெடி செய்வதும் உங்களின் பகுத்தறிவு.
களிமண்ணைப் பிசைந்து உயிரினங்களை உருவாக்குவதும், நட்சத்திரங்கள் அந்தரத்தில் தொங்குபவை என்றும், அது எப்பொழுது வேண்டுமானாலும் நம் மீது விழலாம் என்பதும்,
கடவுள் ஏன் உயிரினங்களைப் படைத்தான் என்று கேட்டால் சொர்கத்தில் வாழ்வதற்கான தகுதி உடைய மனிதனை இங்கு சோதித்தறிய பூமியில் அனுப்பியிருக்கிறான் என்று சொல்வதும் உங்கள் பகுத்தறிவு.
சரி galaxy யில் பூமி கிரகம் இருப்பது தெளிவாகத்தெரியும்,