M.SivaRajan Profile picture
Dec 18 9 tweets 2 min read
*#நெற்றிக்கண்_அம்பிகை*

நெற்றிக்கண்ணுடன் கூடிய அம்பாளை வேலூர் மாவட்டம் வளையாத்தூரிலுள்ள வளவநாதீஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம்.

இப்பகுதியில் வசித்த மன்னர் தீவிர சிவபக்தராக இருந்தார்.

மக்கள் சிறப்பாக வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி, Image
தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவன்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார்.

ஆனால், அவருக்கு எந்த இடத்தில் கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை.

ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு இடத்தைக் குறிப்பிட்டார்.

அதன்படி, மன்னர் வளையாத்தூரில் கோயில் எழுப்பினார்.
விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்தனர். எனவே சிவனுக்கு 'வளவநாதீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார்.

கிரகதோஷ நிவர்த்தி:

வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர்.

இதனால், கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வேண்டிக் கொள்கிறார்கள்.

நெற்றிக்கண் அம்பிகை :

பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள்.
எனவே, இவளை சிவனாகவே கருதி சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்வர்.

இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டுவிரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறாள்.

இங்குள்ள சந்திரசேகரர் சுண்டுவிரல்கள் இரண்டில் மோதிரம் அணிந்துள்ளார்.
சிவன் சன்னதி எதிரே வாசல் கிடையாது.

கல் ஜன்னல் மட்டுமே உள்ளது.

கோயிலில் நுழைந்ததும் முதலில் அம்பாளைத்தான் தரிசனம் செய்கின்றனர்.

சிவன் சன்னதி முகப்பில் நின்ற விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் உள்ளனர்.
இந்த முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு.

கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.

பிரகாரத்தில் சூரியன், பைரவர், விநாயகர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளனர்.
கார்த்திகையன்று கோயிலில் லட்சதீபம் ஏற்றுவர்.

இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான அமைப்பு.

அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.

ஆகியவை சிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது.
வேலூர்- சென்னை ரோட்டில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 17 கி.மீ., சென்றால் வளையாத்தூரை அடையலாம்.

#நெற்றிக்கண்_அம்மன்

#ஓம்ஐம்க்லீம்சௌம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 20
#வன_துர்க்கை

தினமும் காசிக்குப் போகும் கதிராமங்கலம் வன துர்க்கை!

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.

இங்கு தான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,

ஸ்ரீ வன துர்கா பரமேஸ்வரி. Image
இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம்.

அதற்குக் காரணம் ஒரு முனிவர்!

வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.
அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான்.

அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் முனிவர்.

அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள்.
Read 28 tweets
Dec 20
#வேல்_பந்தனம்

முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு.

இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க என்று சொன்னால் மனம் லேசாகி விடும். Image
வேலை வணங்குவதால் காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.

இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.

“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’

இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி,
Read 5 tweets
Dec 19
ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை.

ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர். Image
ராமானுஜர் பிச்சைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம்.

இவ்வாறு  செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார்.

அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிச்சை கேட்கிறார்.
பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிச்சை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார்.

அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
Read 9 tweets
Dec 19
#கோத்திரம்_தெரியாதவர்கள்

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? காஞ்சி மகான்

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவர்.

மகா சுவாமிகளிடம் அபார பக்தி.

அவர் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை, குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். Image
மின்னல் வேக தரிசனம் இல்லை.

ஓரிரு நாள்கள் தங்கி, அவரின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.

”இந்தப் பையனுக்கு ஒன்பது வயசாயிடுத்து.

உபநயனம் நடத்தணும்” என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.

”செய்யேன்…”
”பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

”உன்னோட பையன்தானே?”

“இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார்.

இரண்டு மாதக் குழந்தையை விட்டுவிட்டுத் தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.
Read 7 tweets
Dec 19
#மார்கழி_மாதம்

அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி.

பீடு - பெருமை.

பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம்.

பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம். Image
மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.

விடியற்காலையில் எழுகின்றனர்.

குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர்.

பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப் படுத்துகின்றனர்.

சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர்.
தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர்.

கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து.

அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர்.

விளக்கேற்றுகின்றனர்.

எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன.
Read 6 tweets
Dec 19
#சோளிங்கர்_நரசிம்மர் :*

1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். Image
3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர்.
ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(